Wednesday, June 29, 2011

வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு - ஷாராஜ்

சிறுகதை தொகுப்பு என்றாலே கொஞ்சம் புகைச்சலுடனே கடந்துபோகிறவன் நான். இதற்கு ஒரே காரணம் சிறுகதையின் நெருக்கம் என்பது சில மணிநேரங்கள் மட்டுமே.  சிறந்த படைப்பாக இருந்தாலும் ஒரு சிறுகதையை வெகு நேரத்திற்கு மனதில் நிலைநிறுத்தி கொள்ள முடிவதில்லை. இதை ஒரு குற்றச்சாட்டாக நான் கூறவில்லை எனக்குள் சிறுகதைகள் இன்னும்  மாறுதல்களை எதுவும் கொண்டு வரவில்லை என்பதே உண்மை. 

இப்படி உளறி கொட்டி கொண்டு இருந்தாலும் சில சிறுகதைகளை தாண்டி செல்ல மனம் வராமல் உள்ளே சென்று நீந்தி கொண்டு தான் இருக்கிறேன். அவ்வணமே கடந்த ஒரு வாரமாக ஒரு புத்தகத்தை இரண்டாவது முறையாக படித்து கொண்டு இருக்கிறேன்.

ஷாராஜின்  வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு என்கிற சிறுகதை தொகுப்பை. 



பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு, எல்லா கதைகளும் ஏதோ ஒரு இதழில் வெளிவந்தது. எல்லா கதைகளும் ஏதோ ஒரு செய்தியை நம்மிடம் விட்டு செல்கிறது. உள்ளடக்கத்துடன் ஏதோ ஒன்று நம் மனத்தினுள் உள்ளே சென்று  ஒவ்வொரு காதில் அதன் தாகத்தை நம்மிடம் உருவாக்குகிறது. 


கிழக்கு பதிப்பகத்தின் தள்ளுபடியில் வாங்கிய புத்தகம். வந்தவரை லாபம் என்று வாங்கினேன். புத்தகத்தின் முகப்பு மற்றும் தலைப்பை பார்த்தவுடன் மலையாளத்தில் இருந்து மொழிபெயர்ப்பு செய்தது என்று நினைத்தேன். உள்ளே சென்றபிறகுதான் இது ஒரு மலையாளி எழுதிய தமிழ் கதைகள் என்று தெரிந்தது.ஷாராஜ் வாழ்ந்து கொண்டு இருப்பது தமிழக கேரளா எல்லையோராம். ஆச்சரிய தரும் விஷயம் ஷாராஜ் நல்ல ஓவியர். புத்தகத்தின் முகப்பு அட்டையில் உள்ளது அவர் வரைந்த படம் தான். 


அப்பாவிடம் ஒரு ஆர்மோனியப் பெட்டி இருந்தது 

புத்தகத்தின் முதல் கதை. தமையன் வாயிலாக தந்தையை பற்றி சொல்லு கதை. தனது தந்தையிடம் இருந்த இசைபுலமையை வெகு இயல்பாக சொல்லும் கதை. முக்கியமானது தனது மகன் எழுத்தாளனாக இருப்பதை பற்றி அவர் சொல்லும் கடைசி வரிகள் வாழ்வில் தோற்று போன ஒரு இசை கலைஞனின் வேதனை வெளிபாடு. 



அபிக்குட்டி

வீட்டிற்க்கு புதியதாக ஒரு நாய் குட்டி வருகிறது. அந்த நாயை வீட்டில் உள்ளவர்கள் எப்படி பார்கிறார்கள். அந்த நாயை ஆசையாக வளர்க்கும் மஞ்சு அதை தொட மாட்டேன்கிறாள்  ஏன் என்றால் யாரவது நாயை தொடுவார்களா என்று எதிர் கேள்வி.. நாய் வளர்க்கவேண்டும் என்கிற ஆசை இருந்தாலும் அதை கையால் கூட தொட தயங்கும் மஞ்சுவை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. அந்த நாயின் நிலை என்ன ??



வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு

புத்தகத்தின் தலைப்பை ஏந்தி இருக்கும் சிறுகதை. மொத்தம் உள்ள பன்னிரண்டில் முதலாவது இடத்தை இது பெரும். பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்கிற செய்தி வருகிறது. ஷாராஜ் அவரை பார்க்க  விரும்பவில்லை என்று வெறுப்பை உமிழ்கிறார். பல வருடங்களுக்கு முன் நடந்த பிரச்னையில் தனக்கு சம்பந்தம் இல்லை என்றாலும் அதனால் உண்டான வேதனையை மறக்கமுடியாமல் அவர்களை புறக்கணித்து கொண்டு இருக்கிறார். அம்மாவின் விசும்பலுக்கு இணங்க வர சம்மதிக்கிறார். அப்பறம் ??? புத்தகத்தை படியுங்கள் உண்மையான மனசாட்சி எப்படி இருக்கும் என்று பதிவு செய்திருக்கிறார். அந்த வயதான பாட்டி மேல் இருந்த பரிதாபம் போய் அவர் அம்மா மீது வெறுப்பை உண்டாவதை மறுக்கமுடியாது.



குட்டி இளவரசி 

பகல் இரவுகளைக் கொண்டு வருகிற பறவைகள் 

தப்பாட்டம் 

செய்திகளில் ஒளிந்து திரியும் கள்ளக் கூட்டம்  



இவ்வாறே மற்ற கதைகளும் நம் மனத்தினும் அழகாக உடேறி செல்கிறது. ஷாராஜ் மலையாளி என்றாலும் தமிழ் தான் படித்தது எல்லாம். புத்தகத்தில்  மலையாள வாடை கொஞ்சம் அதிகமாக அடித்தாலும் கதைகள் அதை புறந்தள்ளிவிடுகிறது. படித்து பாருங்கள் நல்லதொரு புத்தகத்தை வாசித்தோம் என்கிற சந்தோஷம் கிடைக்கும். 


வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு 
ஆசிரியர் :  ஷாராஜ்
கிழக்கு பதிப்பகம் 








--
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)










No comments:

Post a Comment