Tuesday, December 20, 2011

சங்கதிகள் 20 டிசம்பர் 2011

புத்தகம் 

தற்போதைய ஹாட் டாபிக் எக்ஸைல் நாவலை படித்து விட்டீர்களா என்பது தான். நித்யானந்தாவால் ஒரு நட்பை நானே முடித்து கொண்டேன் என்பதற்காக மிகவும் வருந்திய தருணம் இது . இந்த நாவல் படித்து முடித்து எனது மகிழ்ச்சியை அவருடன் பகிர்ந்து கொள்ள முடியவில்லை (நித்தி ஒழிக). பழைய சாருவின்  காடுரைகளை படித்து இருப்பவர்கள் கண்டிப்பாக இந்த நாவலை படித்தால் சாரு பேக் டு தி பார்ம் என்று சொல்லும் அளவிற்கு அட்டகாசமான நாவல். முதலில் நாவலை முதல் பக்கத்தில் ஆரமித்து கடைசி பக்கம் வரை படித்தால் தான் உங்களுக்கு நாவல் புரியும், அது ரசனை என்று கூட சொல்லலாம். அடுத்த முறை நாவலை நீங்கள் எங்கு இருந்து வேண்டுமானாலும் படிக்க ஆரமிக்கலாம் சுவாரஸ்யத்துக்கு குறைச்சல் இல்லாமல் செல்லும். நாவலை பற்றி விரிவாக ஒரு பதிவு எழுத வேண்டும். 




வரும் ஜனவரி 5 தேதி முதல் சென்னையில் புத்தக கண்காட்சி தொடங்கவுள்ளது. ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன் அங்கு செல்ல . வாங்க வேண்டிய புத்தகங்களை லிஸ்ட் எழுதி கொண்டு இருந்தேன். முக்கியமான சில புத்தகங்கள் என்கிற கணக்கில் 25 வந்துள்ளது, பட்ஜெட் பார்த்து கூட குறையலாம் ஏறலாம் :). 


பதிவு 

எல்லாவற்றுக்கும் ஒரு சுணக்கம் வந்து விட்டது. படிப்பதற்கு எழுதுவதற்கு எல்லாம்   சோம்பேறித்தனம் வந்துவிட்டது. எதையாவது கிறுக்க வேண்டும் என்கிற எண்ணமே போய்விட்டது. வாரத்துக்கு நான்கு ஐந்து பதிவுகள் எழுதும் பதிவர்களை பார்க்க பொறாமை தான் வருகிறது. இவர்கள் எப்படி எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. முடிந்த வரை பழையபடி எழுத நினைக்கிறேன் பார்க்கலாம்.  


பதிவுலகம் 


ஈரோடு சங்கமம் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்து இருக்கும் ஈரோடு பதிவர்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. கதிர் அண்ணா பதிவை படித்த பிறகு குறுகிய காலத்தில் எவ்வளவு உழைப்பை தந்து இந்த நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது. அதே போல கதிர் அண்ணா அந்த பதிவை எவ்வளவு மகிழ்ச்சியாக பதிவு செய்தார் என்பதற்கு ஆங் ஆங்கே அட்டகாசமாக தெரியும் எழுத்து பிழைகள் சாட்சி.  முன்று வருடங்களாக நானும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நினைக்கிறேன் ஏதாவது ஒரு வேலை வந்து அதை கெடுத்துவிடுகிறது.  சென்னையில் இதே போல ஒரு நிகழ்ச்சியை நடத்த முயற்சிகளை தொடங்கும் நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். கூடிய விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்ப்பார்கிறேன். 




பாடல்கள் 


முப்பொழுதும் உன் கற்பனைகள் - ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் வெளிவந்து இருக்கும் பாடல்கள் அத்தனையும் அருமையாக இருக்கிறது. முக்கியமாக முஹம்மத் இர்பான் பாடி இருக்கும் யார் அவள் யாரோ நச்சென்று இருக்கிறது அதும் பாடல் முடியும் தருவாயில் அவரின் ஹை பிட்ச் வாய்சில் ஏற்றி அதே சமயம் எலெக்ட்ரிகல் கிட்டார் உடன் பயணிக்கும் போது அட்டகாசமான ஒரு ப்யுஷன் போல இருக்கிறது .




மம்பட்டியான் படத்தில் வரும் சின்ன பொண்ணு பாடலும் நன்றாக இருக்கிறது. பழைய பாடலை ரீமிக்ஸ் செய்யாமல் அதே வடிவில் புதிய இசை கருவிகளால் இசையமைத்து அருமையாக வந்திருக்கும் பாடல். கேட்டவுடன் பிடித்ததில் இதுவும் ஒன்று.







திருவொற்றியூர் அப்டேட்

வெகு நாட்களாக கிடப்பில் இருந்த சாலை விரிவாக்கம் ஒருவழியாக முடிவுக்கு வந்து இருக்கிறது. திருவொற்றியூர் மார்க்கெட் பகுதி முதல் ராஜா கடை பேருந்து நிறுத்தம் வரை சாலையை விரிவாக்கம் செய்ய எவ்வளவோ முயன்றும் அங்கு இருந்த கடைகளை இடிப்பதற்கு  நிறைய முட்டுகட்டைகள் வந்தது. கடைசியாக அந்த கடைகளை அகற்ற நஷ்டஈடு கொடுத்துள்ளர்கள். இந்த மாத இறுதிக்குள் கடைகளை எல்லாம் காலி செய்வதாக சொல்லி இருகிறார்கள். இந்த ஆட்சியில் திருவொற்றியூர் மக்களுக்கு கிடைத்த முதல் சந்தோஷமான செய்தி :).




மொக்கை விளம்பரம்

பத்து வருடங்களாக பார்த்து பார்த்து சலித்து,  ரீல் நைந்து போனா  LIC விளம்பரத்தை தூக்கி கடாசிவிட்டு வெகு நேர்த்தியாக மார்க்கெட்டிங் டீம் அட்டகாசமான விளம்பரங்களை கொடுக்க ஆரமித்துவிட்டன. இத்தனைக்கும் அது ஒரு அரசாங்க நிறுவனம். சாதாரண அப்பளத்துக்கு கூட எப்படி மார்கெடிங் செய்கிறார்கள் என்று இதயம் டாட்ஸ் விளம்பரங்களை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.சன்டிவியில் ஒளிபரப்பான பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை பார்த்தவர்கள் லலிதா நகைக்கடையின் பெயரை மறந்து இருக்கமாட்டார்கள். கோடி கோடியாக பிசினஸ் செய்யும் இவர்களில் புதிய விளம்பரத்தை டிவியில் பார்க்கவே சகிக்கவில்லை.  இவ்வளவு மொக்கையான விளம்பரத்தை எப்படி ப்ரோமோட் செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

விளம்பரத்தை பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.  








-- 
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)

6 comments:

  1. அட்வெர்டைசிங் ல இந்த வகை விளம்பரங்கள் எடுக்க பல ஜில்பான்ஸ் காரணங்கள் இருக்கு தல.


    சின்ன பொண்ணு சேலை... பாட்டு நானும் பார்த்தேன். சில இடங்களில் நேரத்தை ரொப்ப வாத்தியங்களை இசைக்க விட்ட மாதிரி இருக்கு. பட் சாங் வாஸ் குட்

    நானும் புத்தக திருவிழாவை ஆவலாக எதிர் பார்த்துகிட்டு இருக்கேன். முக்கியமா உங்களை பார்க்கணும்

    ReplyDelete
  2. // திருவொற்றியூர் அப்டேட் //

    உங்க வீடு டி.எச் ரோட்டில் இல்லாமல் இருந்தால் இப்படியெல்லாம் சுமைலி போட்டு எழுதத்தான் தோன்றும்...

    ReplyDelete
  3. \\Philosophy Prabhakaran said...
    திருவொற்றியூர் அப்டேட் //

    உங்க வீடு டி.எச் ரோட்டில் இல்லாமல் இருந்தால் இப்படியெல்லாம் சுமைலி போட்டு எழுதத்தான் தோன்றும். //

    ஒரு ஸ்மைலி போட்டது தப்பா ?? நான் தினமும் அந்த ரோடுல தான் வரேன்,, அந்த ரோடுல வண்டி ஓட்டிட்டு வருவது எவ்வளவு கடுப்பை தரும் என்று எனக்கு நல்லாவே தெரியும் :)

    ReplyDelete
  4. கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு... ஆனா வருத்ததோட எத்துக்குறத தவிர வேற வழியில்லை... இந்தமாதிரி வீடு கடையெல்லாம் இடிச்சிட்டா டி.எச்.ரோடு டிராபிக் பிரச்சனைகள் சாரியாயிடும்ன்னு எனக்கு நம்பிக்கையும் இல்லை... பார்ப்போம் காலம் பதில் சொல்லட்டும்...

    ReplyDelete
  5. தேவரே, எல் ஐ சி சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 12 லட்சம் கோடி, அத்தனையும் பொதுமக்கள் பணம், உயிருக்காகக் கொடுத்த விலை. சும்மா விளம்பரத்துக்கக சச்சின் தோனின்னு அள்ளி வீசினா நஷ்டம் பாலிசி எடுத்தவன் தலைலதான் விடியும்.

    நிர்வாகச் செலவு அப்படின்னு ஒன்னு இருக்கு அது ப்ரைவேட் இன்சூரன்ஸ் கம்பெனிக்கும் எல் ஐ சிக்கும் ஒப்பீடு செஞ்சீங்கன்னா எல் ஐ சி ரொம்ப கம்மியா இருக்கும். இதனாலத்தான் இவங்களால இவ்வளவு பெரிய வளர்ச்சி காண முடிந்தது. அரசாங்க குறுக்கீடு இல்லைன்னா இன்னும் மிகப் பெரிய வளர்ச்சி கிடைத்திருக்கும், எவனோ பேராசைக்காரனுங்க ஷேர் மார்கெட்ல பூந்து கொள்ளை அடிச்சி மார்கெட் திடிர்னு விழுந்தா தூக்கி நிறுத்தறதுக்கு எல் ஐ சி விட்டா வேற் நாதி இல்லை.

    மிகப் பெரிய முகவர்கள் நெட்வொர்ட் அனைத்து வித மக்களுக்கும் ஏற்ற வகையிலான பாலிசிகள், பளபளன்னு செலவில்லாத அலுவலங்கங்கள், நேரடியாக கேள்வி கேட்டு அணுகும் முறை, அதிக பட்ச க்ளெயிம் ரேஷியோ அப்படின்னு நிறைய விஷயங்கள் பந்தாவா விளம்பரம் குடுத்து மொளகா அறைக்கிற தனியார் காப்பீடு நிறுவனங்களில் இல்லை.

    :)

    ReplyDelete
  6. book fair ku munna book lista blog la eluthunga...

    ReplyDelete