Monday, July 1, 2013

ஹாலிவுட் படம் - 1

The Raid Redemption (2011)

மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையை முன்வைத்து  வந்த படங்கள் எல்லாம் ஒரு கட்டத்தில் இவனுங்களுக்கு  இதே வேலையா போச்சு என்று ஒதுக்கி வைத்து இருந்தேன். கடைசியாக பார்த்த மார்ஷியல் ஆர்ட்ஸ் படம் Ong Bak தான்.  அந்த படங்களின் கதைகள் எல்லாம் அரச காலத்து கதையையும் நம்ப முடியாத அளவுக்கு அந்தரத்தில் பறந்து கொண்டு இருப்பதெல்லாம் எல்லாம் இங்கேயே தமிழ் சினிமாவில் விஜய் அஜித் போன்ற உலக நடிகர்கள் மூலம் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். மார்ஷியல் ஆர்ட்ஸ் படம் என்றாலே மூவர் தான் நம் நினைவுக்கு  சட்டென வருவார்கள் ப்ருஸ்லீ, ஜாக்கி சான் மற்றும் ஜெட் லீ.

புருஸ்லீ படங்கள் எல்லாம் ரொம்பவே பழைய காலத்து படம் ஆகிவிட்டது. ஜாக்கி சான் படமும் போர் அடிக்க ஆரமித்து விட்டது. ஜெட்லீ படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார் என்பதை நம்புவதே கடினமாக இருக்கிறது. இவர்கள் வருசையில் புதியதாக டோனி ஜா என்கிற தாய்லாந்து நாட்டு நடிகரின் Ong Bak சீரியஸ் மார்ஷியல் படங்கள் அவ்வளவாக ஈர்க்கவில்லை. 

படம் பார்க்கும் ரசிகர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு ரசனையை விரும்புகிறார்கள். அக்க்ஷன் படங்கள் ஒரே மாதிரி வந்து கொண்டு இருந்த சமயத்தில் அதை வெகுவாக ரசித்து வரவேற்கும் ரசிகன் தான் ஒரு கட்டத்தில் அந்த படங்களை ஒதுக்கி வைத்துவிடுகிறான். அடுத்து ரொமான்ஸ் படங்கள் வரிசை கட்டி கொண்டு வரும் பிறகு காமெடி பிறகு திர்ல்லர் இப்படி ஒவ்வொரு கால கட்டத்திலும் ரசிகர்களின் ரசனை மாறுபடுகிறது.. இப்போது அக்க்ஷன் படங்கள் வரிசை .. 

The Raid - Redemptionஅதிகாலையில் ஒரு ரெய்டு நடத்த இருவது பேர் கொண்ட போலீஸ் டீம் கிளம்புகிறது. அவர்களின் டார்கெட் 30 மாடிகள் கொண்ட அந்த அப்பார்ட்மெண்டிடை ரெயிடு செய்வது தான்.

அந்த டீமை வயதான கிழவன் அழைத்து செல்கிறான். ஐந்தாவது தளத்தை தாண்டியதும் Tama என்கிற அந்த அப்பார்ட்மெண்டில் வசிக்கும் தாதா ஸ்பீக்கர் மூலம் அந்த அப்பார்ட்மெண்டில் வசிப்பவர்களுக்கு ஒரு செய்தியை சொல்கிறான். ஆறாவது தளத்தில் போலீஸ் வந்துவிட்டது அவர்களை யார் கொள்கிறார்களோ அவர்கள் இனிமேல் அந்த அப்பார்ட்மெண்டில் இலவசமாக குடியிருந்து கொள்ளலாம். சுற்றிலும் அடிஆட்கள் கையில் எல்லா  ஆயுதமும் இருக்கிறது.  எங்கே இருந்து சுடுவார்கள் எப்போ தலையில் போடுவார்கள் என்றே தெரியாது. ஒரு பக்கம் போலீஸ்காரர்களை கொன்று குவித்து கொண்டு இருக்க மறுபக்கம் எப்படியாவது அங்கே இருந்து எஸ்கேப் ஆகா நினைக்கும் சில போலீஸ்காரர்கள். இவர்களிடம் மாட்டாமல் எஞ்சியவர்கள் எப்படி எஸ்கேப் ஆனர்கள் என்பது தான் கதை. 

முழுக்க முழுக்க அதிரடி அக்க்ஷன் இந்தோனேசிய  படம். இங்கிலீஷ் சப் டைட்டிலுடன் பார்ப்பது நல்லது. ரியல் அக்க்ஷன் எப்படி இருக்கும் என்பதற்கு படம் நல்ல உதாரணம். ஹீரோ வில்லன்  எல்லோரும் அடிமேல் அடி வாங்கி கொண்டு இருக்கிறார்கள். Yayan Ruhian தனியாக ஒரு போலீஸ்காரருடன் போடும் சண்டை. போதை மருந்தை தயார் செய்து கொண்டு இருக்கும்  பெரிய கும்பலை எதிர்த்து ஹீரோ Iko Uwais அவனுடன் மற்ற இரண்டு போலீஸ்காரர்கள் போடும் சண்டை. கடைசியாக Yayan Ruhian எதிர்த்து Iko Uwais மற்றும் அவன் சகோதரன் போடும் சண்டை இந்த முன்று பிரதான சண்டை காட்சிகள் மிஸ் பண்ணவே கூடாது..   


இந்தோனேசியாவின் தற்காப்பு கலையான Pencak Silat பிரதானமாக வைத்து மிரட்டி இருக்கிறார்கள். ஒவ்வொரு அடியும் இடி மாதிரி விழுகிறது செம பாஸ்ட் சண்டை காட்சிகள். இதில் Yayan Ruhian Pencak Silat  தற்காப்பு கலையில் எல்லா லெவலையும் முடித்து மிக சிறந்த வீரராக இருக்கிறார். அதனால் தான் என்னவோ படத்தின் டைரக்டர் இவரை அடித்து வீழ்த்த முடியாது என்பதை அவர் இறக்கும் காட்சியின் மூலம் தெரியபடுத்துகிறார். 

படத்தை எழுதி டைரக்டர் செய்தவர் Gareth Evans . இது அவரது முன்றாவது படம் இதற்கு முந்தைய படங்களை பார்த்தே தீரவேண்டும் என்கிற ஆவலை கொண்டு வந்துவிட்டார். படத்தின் பின்னணி இசையை அவ்வளவு எளிதில் ஓகே என்று சொல்லி விடமுடியாது அதிரடி அடிதடிக்கு ஏற்ப பின்னணி இசையும் செமயா மிரட்டி இருக்கார்.அக்க்ஷன் ரசிகர்கள் தவற விட கூடாத படம் :).


--
With Love
ரோமியோ 

No comments:

Post a Comment