Wednesday, July 3, 2013

ஹாலிவுட் படம் - 3


லக படங்களை பார்க்கும் அளவுக்கு எனக்கு பொறுமை இருந்ததில்லை. அதாவது உலக படங்கள் எல்லாம் ரொம்ப மெதுவாக நகரும் படங்கள் என்கிற கண்ணோட்டத்தில் இருந்ததை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி கொண்டு வருகிறேன். என்னுடைய ரசனை இது தான் என்று எனக்குள் நான் போட்டு இருந்த எல்லை எனக்கே தெரியாமல் விரிவாகி கொண்டே இருக்கிறது. தெரியாத மொழியில் என்னத்த பார்க்க போறோம் என்கிற எண்ணதை மாற்றியது அண்ணன் ஜாக்கி தான். அவரின் தளத்தின் வழியாக சென்றுபார்த்து ரசித்த படங்கள் அதிகம். எனது எல்லையை விரிவாக்கிய ஜாக்கி அண்ணனுக்கு நன்றி.


The Skin I Live In (2011) aka "La piel que habito"

 

 

ராபர்ட் புகழ்பெற்ற பிளாஸ்டிக் சர்ஜன், நெருப்பு மற்றும் பூச்சி கடியில் இருந்து தற்காத்து கொள்ள செயற்கையான தோல் ஒன்றை உருவாக்கி கொண்டு இருக்கிறார். தான் வாழ்ந்து கொண்டு இருக்கும் அரண்மையை போன்ற வீட்டில் ஒரு பெட் ரூமில் வெரா என்கிற பெண்ணை அடைத்து வைத்து இருக்கிறார். அவளுக்கு தேவையானது எல்லாம் அந்த வீட்டிலே தங்கி வேலை செய்யும்  வயதான கிழவி மரிலியா லிப்ட் மூலம் கொடுத்து அனுப்புகிறாள். இவர்களுக்கும் இடையே ஸ்பீக்கர் மைக் இருக்கும் அதன் மூலமே தொடர்பு கொள்கிறார்கள். வெராவின் ரூமில் இருக்கும் கேமரா மூலம் மரிலியா அவளை பார்க்க முடியும். 

வெராவை கொண்டு தனது சோதனை முயற்சிகளை தொடர்ந்து கொண்டு இருக்கிறான் ராபர்ட். ராபர்ட்டை வெரா உறவுக்கு அழைக்க அதை ஏற்காமல் அங்கு இருந்து சென்று விடுகிறான். வெரா நல்ல அழகி, பார்த்த உடனே பற்றிகொள்ளும் உடல்வாகு அப்படிபட்ட அழகான பெண்ணே உறவுக்கு அழைத்தும் ஒரு மறுக்கிறான் என்றால் !!!! 

ஒரு முறை வெரா தற்கொலைக்கு முயல அவளை அதில் இருந்து காப்பாற்றுகிறான் ராபர்ட். ராபர்ட் தனது வேலையை இழந்துவிட்டதை மரிலியாளிடம் சொல்லி அங்கே வேலை செய்து கொண்டு இருக்கும் மற்றவர்களை வீட்டுக்கு அனுப்பிட சொல்லி விட்டு  வெளியூருக்கு சென்று விடுகிறான். மற்ற வேலையாட்கள்  அங்கே இருந்து கிளம்பியதும்  Zeca அங்கு வருகிறான். Zeca அங்கே வேலை செய்து கொண்டு இருக்கும் மரிலியாவின் மகன். 

தனது மகன் அவன் கூட்டாளிகளுடன் ஒரு நகை கடையை கொள்ளை அடித்துவிட்டு அந்த  வீட்டில் தஞ்சம் தேடி வந்து இருப்பவன் என்பதை அறிந்து கொள்கிறாள் மரிலியா. அப்போது கேமராவில் தெரியும் பெண்ணை பார்த்ததும் காமவெறி தலைக்கு ஏறி அவள் இருக்கும் ரூம் சாவி கேட்டு தனது தாயையே மிரட்டுகிறான் Zeca. சாவி கிடைத்துவிட வெராவை கற்பழிக்க முயல்கிறான். அந்த சமயத்தில் நீ எப்படி கார் அக்சிடெண்டில் இருந்து தப்பித்தாய் என்கிறான். வெராவிற்கு Zeca யாரென்றே தெரியாது, முதல் முறையாக இப்போது தான் பார்க்கிறாள். அந்நியன் ஒருவன்  தன்னை கற்பழிக்க முயல்கிறான் என்றால் ஒரு பெண் அதை எதிர்த்து போராடுவாள் தானே. இங்கே வெரா வா கார்டனுக்கு போலகளாம் என்கிறாள் !!!

இந்த நேரத்தில் ராபர்ட் அங்கு வந்துவிட Zecaவை கொன்று விடுகிறான். மரிலியா ராபர்ட், Zeca  பற்றிய கதையை வெராவிடம் சொல்கிறாள். அவர்கள் இருவரும் எனது மகன்கள் தான் ஆனால் தந்தை வேறு வேறு. ராபர்டின் மனைவி மகளின் நிலைமை என்ன ஆனது. இங்கே இருந்து தான் படம் சஸ்பென்ஸ் உடைய தொடங்குகிறது. ஒரு கார் அக்சிடெண்ட்டில் இருந்து மிகவும் பாதிக்க பட்ட மனைவியை காப்பாற்றுகிறான் ராபர்ட். அவளுக்கு தன வீட்டில் வைத்தே சிகிச்சையை தந்து கொண்டு இருக்கிறான். ஒரு நாள் தன் மகள் பாடும் பாடலை கேட்டு அவளை பார்க்க வெளியே வரும் ராபர்ட் மனைவி கண்ணாடியில் தனது முகத்தை பார்த்து முன்றாவது மாடியில் இருந்து குத்திட்டு தற்கொலை செய்து கொள்கிறாள். அம்மாவின் சாவை நேரில் பார்த்த மகளுக்கு கொஞ்சம் மூளை கலங்கிவிட. வேறு ஒரு விஷயத்தில் பாதிக்கப்பட்டு அவளும் தற்கொலை செய்து கொள்கிறாள். அன்பு மகளில் சாவுக்கு பழிக்கு பழி வாங்க கிளம்புகிறான் ராபர்ட். 

இந்த படத்தின் கதையை இத்துடன் நிறுத்தி கொள்வோம். இதற்கு மேல்   தொடர்ந்தால் படம் பார்க்கும் போது  சுவாரஸ்யம் கம்மியாகிவிடும். Antonio Banderas ஸ்பானிஷ் மொழி படங்களில் பிரதான கதாநாயன்.  ஹாலிவுட் படங்களிலும் இவரை பார்த்து இருப்பீர்கள். ஒரு தந்தையாக மகளை நெருங்க முடியாத வேதனை. டாக்டராக தனது வேலையில் கச்சிதம்.இந்த படத்தில் அவ்வளவு நேர்த்தியாக பொருந்தி உள்ளார். 

 

 


Elena Anaya இவரும் ஸ்பானிஷ் நாட்டு நடிகைதான். Van Helsing படத்தில் ரத்த காட்டேரியாக வரும் மூன்று பெண்களில் ஒருவராக துக்கடா ரோலில் வந்து இருப்பார். இவரா அது என்று வியக்கும் அளவுக்கு வெரா கதாபாத்திரத்தில் நன்றாக பொருந்தியுள்ளார். தனிமை, பல வருடங்களாக ரூமில் அடைந்து கொண்டு வெளிக்காற்றை சுவாசிக்க முடியாமல் இருக்கும் தவிப்பு. ஒரே உடை அது துணியில் செய்ததில்லை. தன்னை சோதனை எலியாக பாவித்து ராபர்ட்டின் எல்லா சோதனைகளுக்கும் உட்படும் பெண்ணாக நன்றாக நடித்துள்ளார்.  

இந்த படத்தில் இவர்களில் பங்களிப்பை இனியும் சொன்னால் அது படத்தின் சுவாரசியத்தை கண்டிப்பாக குறைத்துவிடும்.


ராபர்ட்டின் மனைவி மகளுக்கு என்ன ஆனது. வெரா ஏன் பல வருடங்களாக அந்த அறையில் அடைத்து இருக்கிறாள். இந்த சஸ்பென்சை தெரிந்து கொள்ள டவுன்லோட் செய்து படம் பார்க்கவும். த்ரில்லர் படம் என்று சொல்வதை விட சின்னதாக சஸ்பென்ஸ் உள்ள படம் அவ்வளவுதான். வெரா பற்றிய அந்த சின்ன சஸ்பென்ஸ் தான் படத்தின் உயிர்நாடி. இவ்வளவு ரிஸ்க் எடுக்கும் ராபர்ட் எல்லாவற்றிலும் ரொம்பவே கேஸ்ஷுவலாக இருப்பது கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது. 1984ஆம் வருடம் எழுத்தாளர் Thierry Jonquet   பிரெஞ்சு மொழியில் எழுதிய Mygale நாவலை அடிப்படையாக கொண்டு உருவான படம். இதே நாவல் பின்னர் Tarantula என்கிற பெயரில் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தது. 

படத்தின் இயக்குனர் Pedro Almodovar பல படங்களை இயக்கி பல விருதுகளை அள்ளியவர். இந்த படத்தின் காட்சி அமைப்புகள் எல்லாம் பிரமாதம். படத்தை பார்க்கும் போதே சில கேள்விகள் எழாமல் இருக்காது.  அவரின் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் முதல் படமாக இந்த படத்தை பார்த்து இருக்கிறேன். இனி மற்ற படங்களை பார்க்காமல் விடுவதில்லை.


படத்தின் டிரைலர்


 


-- With Love
Romeo ;)

No comments:

Post a Comment