Tuesday, May 18, 2010

சில விஷயங்கள் மனதில்பட்டது

போலீஸ்காரர்களுக்கு போதாத காலம் போல இருக்கு. மாசத்துக்கு ஒண்ணுன்னு யாரவது ஒருத்தர் அடிப்பட்டோ இல்லை உயிரை விட்டுடோ இருக்காங்க. சமிபத்தில் இறந்த இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் என்பவரை பற்றி அந்த மாவட்ட எஸ்.பி ரொம்ப கவலையா தன்னோட வேதனையை சொல்லி இருக்காரு. செக்யூரிட்டி வேலை என்பது ரொம்ப கஷ்ட பட்டு செய்யும் வேலை அல்ல என்பதை நிறைய பேர் அறிவார்கள். அதுவே அவர்களுக்கு சாதகமாகவும்/ பாதகமாகவும் ஆகிவிடுகிறது. எங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் செக்யூரிட்டி ஆட்கள் சில நாள் 24 மணிநேரம், 36 மணிநேரம் எல்லாம் வேலைசெய்து கொண்டு இருப்பார்கள். இது எதனால் என்றால் ஒருவரை ரீலீவ் பண்ண மற்றவர் வரவில்லை என்றால் இதை போன்று அதிக நேரம் வேலை செய்வார்கள். அவர்களின் உடல்நிலையை விட மனஅழுத்தம் அதிகமாக இருக்கும். இரவு முழுவதும் தூங்காமல் அடுத்தநாள் பகலில் வேலைசெய்வது என்பது எல்லாம் அவ்வளவு எளிது அல்ல. அதும் வீட்டிற்கு செல்லாமல் வேலை செய்வதால் ரொம்ப எரிச்சலுடன் பகலில் வேலைசெய்வார்கள் சிலர். ஹ்ம்ம் இனி பேசி என்ன செய்ய ஒரு உயிர் போன பிறகுதான் நமக்கு புத்திவரும் அதுவும் கொஞ்ச நாளுக்கு தான். 

போலீஸ் மேட்டர் இப்படினா விசாரணை கைதிகள் நிலைமையை ரொம்ப மோசமா இருக்கு. கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் 44 லாக் அப் மரணங்கள் நடந்து உள்ளதாக மனித உரிமை கழகம் ஒன்று பட்டியல் இடுகிறது. போலீஸ்ன் வரைமுறை இல்லாதா விசாரணைதான் இத்தனை மரணங்கள் நடந்து உள்ளது. சென்னை என்றால் என்ன கன்யாகுமரி என்றால் என்ன எங்கேயும் எப்போதும் அவர்கள் கைகளில் இருக்கும் அந்த லட்டியை சுழற்றி சுழற்றி அடித்தால் உண்மை வந்துவிடும் என்று நினைத்து செய்கிறார்கள்.  அடித்தே உண்மையை வாங்கிவிடலாம் என்பது ஒரு வழி, அல்லது குடும்ப உறுப்பினர்களை வைத்து டார்ச்சர் பண்ணி உண்மையை வாங்கிவிடலாம் என்பது ஒரு வழி.  அடி ஒவ்வொன்றும் இடி மாதிரி விழுந்தால் அவன் புதைக்குள் தான் செல்வான். இத்தனை மரணகளுக்கு இவர்கள் மட்டுமே பொறுப்பு அல்ல, இவர்களை ஆட்டி வைக்கும் பணமும்  ஒரு வகையில் பொறுப்பு. கைநீட்டும்  இன்ஸ்பெக்டராக இருந்தால் அவர் ஓய்வு பெரும் நேரத்தில் கண்டிப்பாக 3 - 5 வீடுகள் இருக்கும் (சின்ன வீடு இல்லைங்க கல் வீடுங்க). அரசானை என்ன சொல்கிறது ?? அரசு ஊழியர்கள் தாங்கள் வாங்கும் எந்த பொருளையும் கண்டிப்பாக அதை பற்றி அரசுக்கு தெரியப்படுத்த  வேண்டும். அவ்வாறு செய்யாமல் இருப்பது ஒரு குற்றமாக கருதப்படுகிறது, இங்கே யார் எல்லாம் இதை பின்பற்றுகிறார்கள் ???  தினமும் கையுட்டு வாங்கி கைதாகும்  அதிகாரிகளை பற்றி செய்தி தாள்களில் படித்து கொண்டு தான் இருக்கிறோம் இருந்தும் என்ன ப்ரோஜனம்!! புதிது புதிதாக ஒரு வழியை கண்டுபிடித்து காசு வாங்கி கொண்டுதான் இருகிறார்கள். மக்கள் கண்டிப்பாக பணம் குடுக்க மாட்டேன் என்று சொல்லி பழகவேண்டும், எங்கேயும் எப்போதும். 


ஒரு வழியா சிங்கமுதுவை கைது பண்ண வச்சிட்டாரு வைகை புயல். முதல்வரை சந்தித்த அடுத்த நாள் சிங்கமுத்து கைது செய்து இருப்பதை பார்க்கும் போது கண்டிப்பா ஏதோ ஒன்று இவ்வளவு நாளாக சிங்கமுத்துவை நெருங்க முடியாமல் செய்து இருக்கிறது என்று தெரிகிறது. அதனால் தான் வைகை புயல் முதல்வரை சந்தித்து முறையிடும் அளவுக்கு வந்து இருக்கிறார். காமெடி பண்ணியது போதும் கொஞ்சம் வில்லத்தனம் பண்ணி பார்க்கலாம் என்று நினைத்து விட்டார் போல. ஆனால் இவர் முதல்வரை ஏன் சந்தித்தார் என்றால் கவிஞர் விஜய் நடிக்கும் இளைஞன் படத்தில் இவரும் நடிகிறாராம் அதனால் வந்து சந்தித்தாரம்!! இது எவ்வளவு பெரிய காமெடி !!!!!! வந்த வேலை முடிந்தது என்கிற சந்தோஷத்தில் கண்டிப்பா குறட்டை விட்டு தூங்கி இருந்து இருபார் புயல். 


நாமக்கல் மாவட்டம் வேலூரில் சென்றவாரம் நடந்த ஒரு விழாவிற்கு சென்று இருந்தேன். ரொம்ப தாகம் எடுத்ததால் பக்கத்தில் இருந்த ஒரு கடையில் குளிர்பானம்  வாங்கி குடித்தேன். அதன் உண்மையான விலையோ 9 ருபாய், ஆனால் அந்த கடைகாரர் 12 ருபாய் என்று வாங்கி கொண்டார். எனக்கும் அவருக்கும் சிறிது வாக்கு வாதம் நடந்தது அவர் சொல்லிய எந்த பதிலும் எதற்கு இந்த விலை ஏற்றம் என்பதற்கு காண  பதிலே இல்லை. அவரின் இஷ்டத்துக்கு விலைவைத்து விற்பாரம் ரொம்ப எரிச்சலுடம் அங்கு இருந்து நகர்ந்தேன். சென்னை பற்றி எவ்வளவு கேவலமாக பேசினாலும் மற்ற மாவட்டங்களை விட மலிவாக எந்த பொருளையும் சில்லறை கடைகளில் வாங்கிவிடலாம். இதே குளிர் பானம் 9 அல்லது 10 ருபாய்க்கு எல்லா கடைகளிலும் கிடைக்கும்.  முன்பு எல்லாம் அம்மா அடிகடி சொல்லுவாங்க சென்னைல  20 ருபாய் இருந்தா போதும் ஒரு நாள் மூன்று வேலை  மீன் குழம்புடன் சூப்பரான சாப்பாடு பொங்கி சாப்பிடலாம் என்று, அதையே கொஞ்சம் மாற்றி 40 ருபாய் என்று வைத்து கொள்ளலாம் இப்பொது.

சென்ற திங்கள் அன்று ஈரோடில் இருந்து சென்னைக்கு மதியம் கிளம்பும் கோவை எக்ஸ்பிரஸ் வண்டியில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையில் பயணித்து கொண்டு வந்தேன். நான் இருந்தது D10  அதாவது அந்த வண்டியில் முன்பதிவு செய்யப்பட்ட கடைசி பெட்டி அது, அதற்கு பிறகு முன்பதிவு செய்யாத பொது பெட்டி இருந்தது. வண்டியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பொது பெட்டியில் பயணம் செய்பவர்கள் எல்லாம் எல்லாம் எங்கள் பேட்டியில் ஏறி கொண்டார்கள். கூட்டம் ஒருபுறம் இருந்தாலும் டிக்கெட் பரிசோதகர் என்று ஒருவரும் வரவில்லை எங்கள் பகுதியில். நான் இதே வண்டியில் இரண்டாவது முறையாக செல்கிறேன் அதுவும் இதே பெட்டியில்,  இரண்டு முறையும் டிக்கெட் பரிசோதகர் கடைசி பெட்டிக்கு வரவே இல்லை. ஒரு பயணி தனது டிக்கெட் கன்பார்ம் ஆனதா என்று தெரிந்து கொள்ள அவர் இருந்த D2 பெட்டிக்கு சென்று வந்தார். ரயில்வே லாபகரமாக தான் ஓடுகிறது அதற்காக இவர்கள் வேலையை செய்யாமல் சம்பளம் வாகுவது எந்தவிதத்தில் நியாயம் ??? டிக்கெட் சிஸ்டமில் வேறு ஒரு மாறுதல் கொண்டு வரவேண்டும். அன்றைய பயணத்தில் டிக்கெட் பரிசோதகர் கண்டிப்பாக ஒவ்வொரு பயனியிடனும் டிக்கெட் பரிசோதனை செய்து இருக்க வேண்டும் என்று  இருந்தால் நன்றாக இருக்கும். 



இன்னைக்கு மேட்டர் இவ்வளவு தாங்க அடுத்த பதிவில் மனதில்பட்ட சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.  

 


With Love 
Romeo ;)

4 comments:

  1. train matter eppavum nadakarthu athuvum kovai-chennai routle sagajam. also its quiet normal in the trains that goes to north. after some stations TTE wont come

    ReplyDelete
  2. ப‌கிர்வுக‌ள் எல்லாம் ந‌ல்லா இருந்த‌து... குளிர்பான‌ங்க‌ள் விலை ப‌ற்றிய‌ செய்தி உண்மைதான்..

    ReplyDelete
  3. டிரைனில் இதெல்லாம் சகஜமா நடக்குது.. அதே போல நகரத்தைத் தாண்டிட்டா.. எந்த கடையிலேயும் விலை பத்தி வாயே திறக்க முடியாது...

    ReplyDelete
  4. நாங்க சேலம் போய்ட்டு வந்தப்போக்கூட டிடிஆர் வரலை,அது ஏசி கம்பார்ட்மெண்ட்.ஏசியை குறைச்சு வைக்க படாத பட்டோம்.

    சென்னையில் விலைகள் மற்ற ஊர்களை விட கட்டுக்குள் தான் இருக்கு ஒன்னே ஒன்னு தவிர வீட்டு வாடகை தான் அது,இப்போ புறநகர்லயே சிங்கிள் பெட்ரூம் 4500 ஆயிட்டு,டபிள் 6000.
    எல்லாம் டஞ்சன் போல வீட்ட கட்டி காசுபாக்குறாங்க,வீட்டுக்குள் 2 ஏசி போட்டாதான் இருக்கவே முடியும்,

    போலீஸ் காரங்களில் நல்ல போலீஸ்காரர்களும் இருக்கின்றனர்,ஆனால் 100க்கு வெறும் 5சதம்.

    வடிவேலு படத்தில் தான் காமெடியன்,நிஜத்தில் வில்லன்.

    ReplyDelete