வேண்டுகோள்
இன்று இந்த நூற்றாண்டின் மிக பெரிய ஒற்றுமையான தேதி, 10/10/10 இந்த அறிய தினத்தில் நாம ஒரு உருப்படியான காரியத்தை செய்யலாமே. அதாவது 10 நிமிஷம் உங்க வீட்டில் இருக்கும் கரண்ட் சப்ளை ஆப் பண்ணிடுங்க. ஒரு வீட்டில் செய்தால் கொஞ்சம் போல கரன்ட் மிச்சம் பண்ணலாம் அதுவே ஒரு ஊராக இருந்தால் எவ்வளவோ மிச்சம் பண்ணலாம். ஸோ உங்களுக்கு தெரிஞ்சவங்க , பக்கத்துக்கு வீட்டுகாரங்க, சொந்தகாரங்க, நண்பர்கள் கிட்ட எல்லாம் கொஞ்ச நேரம் மெயின் பாக்ஸ் ஆப் பண்ண சொல்லுங்க. ஏதோ நம்மளால முடிஞ்ச சிறு உதவியா இருக்கட்டும்.
நன்றி
இத்தனை நாளா தெரியாத ஒரு வழியை அண்ணன் பாலா சொல்லி இருக்காரு. ஆபீஸ்ல ப்ளாக் ஓபன் பண்ண முடியாம எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று எனக்கு தான் தெரியும். ஒவ்வொரு தடவையும் மெயில் பாக்ஸ்ல டைப் பண்ணி வச்சி வெளிய இருக்கும் இன்டர்நெட் கபேல போய் போஸ்ட் பண்ணிட்டு இருந்தேன். இன்னைக்கு அண்ணன் போஸ்ட் படிச்ச உடனே ஒரு டெஸ்ட் பண்ணி பார்த்தேன் சூப்பரா வொர்க் ஆகுது. அண்ணே இதை எனக்கு முதலே சொல்லி இருக்கலாம்ல இருந்தாலும் ரொம்ப நன்றி அண்ணே.
என்னம்மா யோசிக்கிறாங்க டா சாமி ..
கொஞ்ச நாளுக்கு முன்னாடி நானும் தங்கமணியும் டிவி பார்த்துட்டு இருந்தோம் அப்போ ராஜ் டிவில சினிமா தெரியமான்னு ஒரு நிகழ்ச்சி மொக்கையான ஒரு கேள்வி கேட்டு பதில் சொல்லுங்கன்னு ஒருத்தர் பேசிட்டு இருந்தாரு. பதில் சொன்னா பணம் பரிசுன்னு போட்டு இருந்துச்சு. சரி நானும் என்னோட போன்ல ட்ரை பண்ணிட்டு இருந்தேன் லைன் போகவே இல்ல. தங்கமணி போன் எடுத்து ட்ரை பண்ணேன் லைன் கிடைச்சுது பட் அது ஆட்டோமாடிக் வாய்ஸ், அதாவது என்னோட கால் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்குன்னு சொல்லுச்சு. சரின்னு நான் அஞ்சி நிமிஷமா காதுல வச்சு பார்த்துட்டு இருந்தேன் டிவில பேசிட்டு இருந்தவன் விடாம பேசிட்டே இருக்கான் ஆனா ஒருத்தரும் லைன்ல இல்ல. திடிர்ன்னு கால் கட் ஆகிடுச்சு என்னடான்னு பார்த்தா மொபைல் பலன்சே இல்ல. அஞ்சி நிமிஷத்துல ஐம்பது ருபாய் போச்சு!!!.. அட பாவிங்களா இவங்க கில்லாடி தனத்தை அப்போ தான் தெரிஞ்சிகிட்டேன், ப்ரோக்ராம் பார்த்துட்டு இருந்தேன் பத்து நிமிஷமா அந்த பையன் பேசிட்டு இருந்தானே தவிர ஒருத்தரும் லைன்ல வரல. கீழ ஓடிட்டு இருந்த மெசேஜ் பார்த்தா ஒரு கால்க்கு பத்து ருபாய்ன்னு போட்டு இருக்கு !!! என்ன ஒரு திருட்டு தனம் பாருங்க நான் ஒருத்தன் அம்பது ரூவாயை அழுதேன் அதே மாதிரி எத்தனை பேரு எவ்வளவு ரூவா அழுதாங்களோ. இப்போ இந்த நிகழ்ச்சி S.S.Musicல வேற தனியா வருது. இவங்க கேள்வி எல்லாம் பார்த்தா அவ்வளவு கொடுமையா இருக்கு. விஜய் & அனுஷ்கா ரெண்டு பேரு போட்டோ போட்டு இது எந்த படம்ன்னு கேக்குறாங்க!!! ஆனா ஒண்ணு மட்டும் உறுதி ஏமாத்துறவன் இருக்குற வரைக்கும் ஏமாறுகிறவன் ஏமாந்துட்டே தான் இருப்பான். அதில் நானும் ஒருவன் :(
திருவொற்றியூர் நியூஸ்
எங்க ஏரியால நடக்கும் அரசியல் கூத்து எல்லாம் ரொம்ப கேவலமா இருக்கு. என்ன தான் அமைச்சர் தொகுதி என்று பெயர் இருந்தாலும் ரோடு இருக்குற நிலைமை எல்லாம் ஏதோ குக்கிராமத்தில் இருப்பது போல இருக்கு. உங்களுக்கு நான் சொல்லுறது ஏதாவது சந்தேகம் இருந்தால் திருவொற்றியூரில் இருந்து மீஞ்சூர் வரைக்கும் போற டவுன் பஸ்ல போய் பாருங்க சென்னைல இவ்வளவு கேவலமான ஒரு ரோடுட்டை நீங்க பார்க்கவே முடியாது. இன்னும் ரெண்டு மாசத்துல ரோடு போடுறோம்ன்னு அமைச்சர் சொல்லி இருக்கார்ன்னு தினத்தந்தில படிச்சேன். ஒரு கொடுமை என்னன்னா திருவொற்றியூர் நகராச்சி ஷேர்மேன் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர் என்பதால் அவர் கட்சி சார்பா இந்த மாசம் ரோடு போடசொல்லி அரசுக்கு எதிர சாலை மறியல் போராட்டத்தை அறிவிச்சி இருக்காரு/இருக்காங்க. இப்போ எல்லாம் நான் அந்த ருட்ல போறதே இல்ல, பைக் எடுத்தா பீச் ரோடு சுத்திட்டு தான் போறேன்.
எந்திரன்
நானும் எந்திரன் பார்த்துட்டேன், நானும் எந்திரன் பார்த்துட்டேன்... போன வாரம் ஆபீஸ்ல, பிரெண்ட்ஸ் சார்க் எல்லாம் இதுவே பேச்சா போச்சு. ஐயோ ஏதோ தெய்வ குத்தம் ஆனது போல இருந்துச்சு ஒரு சுபயோக சுபதினத்தில் நானும் தங்கமணியும் படத்தை பார்த்தோம். படம் பார்த்த பிறகு ரெண்டுபேருக்கும் ஒரே மாதிரியான மனநிலையில் தான் இருந்தோம். இத படத்துக்கா இவ்வளவு பில்ட் அப் ??? ரஜினி அக்டிங் சூப்பர், ஐஸ்வரியா டான்ஸ் நல்லா இருந்துச்சு. கடைசில கிராபிக்ஸ் கொஞ்சம் இல்ல ரொம்பவே கேவலமா இருந்துச்சு என்பது தான் உண்மை இது ஏதோ ராமநாரையணனின் குட்டி பிசாசு படத்தின் அடுத்த வெர்ஷ போல இருந்துச்சு அவ்வளவு மோசம். முதல் பாதி சூப்பர், இரண்டாம் பாதி கொஞ்சம் ஓகே ரஜினி அக்டிங் சூப்பரோ சூப்பர். அதும் ஆடு மாதிரி கத்துற இடம் செம அப்லஸ்.
ஐட்ரீம்
நான் +1 படிச்சிட்டு இருந்தப்போ மோகன்ராஜ்ன்னு ஒரு நண்பன் இருந்தான், காசிமேடுல இருந்து வருவான் அவன் காமெடி பண்ணுறதுல செம கில்லாடி, அதே மாதிரி படிப்பில் செம மக்கு. அவன் பத்தாவது பாஸ் பண்ணாதே பெரிய விஷயம்ன்னு அந்த ஸ்கூல் மாஸ்டர்ஸ் சொன்னங்க. அவன் வீடும் ஸ்கூல் பக்கத்திலே இருந்ததுனால மதியம் சாப்பாடு அவங்க அம்மா எடுத்துட்டு வந்து தருவாங்க. சில நாள் வஞ்சிர மீன் வறுவல் இருக்கும். நல்லா மூக்கு முட்ட சாப்பிட்டு மதியம் காணாம போயிடுவான் அவன் பேக் மட்டும் கிளாஸ் ரூம்ல இருக்கும் சாயந்திரம் ஸ்கூல் விடுற டைம்ல கரெக்டா ஸ்கூல் முன்னாடி வந்து நிப்பான் ஒரு பையன் அவன் பையை எடுத்துட்டு வந்து தருவான். எங்கடா போனன்னு கேட்டா ஹீ ஹீ ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு படத்துக்கு போனேன்னு சொல்லுவான், எந்த படம்னா அது எல்லா தியேட்டர்ளையும் ஓடி கடைசியா பெட்டிக்கு போகுறதுக்கு முன்னாடி கடைசியா ஒரு தடவை தியேட்டர்ல ரிலீஸ் பண்ண படமா இருக்கும். எந்த தியேட்டர்ன்னு கேட்டா பிரைட்டன்னு சொன்னான் அப்போ தான் தெரிஞ்சிது, அவனை பார்த்தா படம் பார்த்துட்டு வந்தவன் போல இல்ல முகம் எல்லாம் வீங்கி இருந்துச்சு , அப்பறம் தான் தெரிஞ்சிது அவன் படம் பார்க்க போகல அங்க போய் நல்லா தூங்கிட்டு வந்து இருக்கான். இந்த மாதிரி நிறைய தடவை ஸ்கூல் கட் அடிச்சிட்டு போய் தூங்கிட்டு வந்து இருக்கான். அந்த தியேட்டர் அவ்வளவு கேவலமா இருக்கும் அப்போ. இப்போ அந்த பிரைட்டன் தியேட்டர் தான் ஐட்ரீம் ஆகி ராயபுரம் ஏரியால சக்கை போடு போட்டுட்டு இருக்கு. சீட், சவுண்ட் சிஸ்டம், ஏ.சி, ஸ்க்ரீன், கிளீன் அண்ட் நீட், அதிகம் இல்லாத கட்டணம் முதல் வகுப்பு கட்டணமே 70 ருபாய் தான் தியேட்டர் நல்லா இருக்கு. அந்த தியேட்டர் போன உடனே எனக்கு மோகன்ராஜ் நினைப்புதான் வரும் .
--
With Love
Romeo ;)
நிறைய சங்கதி சொல்லி இருக்கீங்க..... ம்ம்ம்.....
ReplyDeleteபத்து நிமிடம் மின் விளக்குகளை அணைப்போம் என்ற விளம்பரத்திற்காக பத்து மணி நேரம் தொலைகாட்சி, செய்தி தாள்களில் விளம்பரம்.
ReplyDeleteஇனியாவது இது போன்ற செயற்கை நாடகங்களை புறம் தள்ளுவோம்.
ஏங்க ராஜ் டிவிய பார்க்குறதே குத்தம். சரியான திருட்டு ப்ரோக்ராம். கேர்ஃபுல்.
ReplyDeleteபரவாயில்லையே எந்திரன் பற்றி என் கருத்தை ஒட்டியே இருக்கிறது.
ஆர்காடு வீராசாமி அவர்கள் பார்த்துக்கொள்வார் என்று நம்புகிறேன்
ஏறகனவே கட்பண்ணுறது போதாதா நண்பா.
ReplyDeleteமின்வெட்டுக்கு இடைல தானே சப்லையே!!!
சரி,என்ன வித்தை செஞ்சி மீண்டும் பதிவு படிக்க ஆர்ம்பிச்சீங்க,அதையும் சொல்றது,பிறருக்கும் உதவுமே.
ஏனுங்கன்னா
இன்னுமா இந்த பரிசுப்போட்டிக்கெல்லாம் கலந்துகொள்லும் ஆர்வம்?அதும் பகல்கொள்ளை போட்டியில்,எல்லா சேனலிலுமே இது ஐந்து வருஷமா நடக்குதே,
எந்திரன் சேம்ப்ளட்
ReplyDelete@ Chitra
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@ராம்ஜி_யாஹூ
விடுங்க பாஸ் .. அவங்க ஏதோ பண்ணலாம்ன்னு பண்ணுறாங்க.
@பின்னோக்கி
\\ராஜ் டிவிய பார்க்குறதே குத்தம்//
இதுஎன்ன பாஸ் புதுசா ஒரு குண்டை போடுறீங்க.
@|கீதப்ப்ரியன்|Geethappriyan|
\\சரி,என்ன வித்தை செஞ்சி மீண்டும் பதிவு படிக்க ஆர்ம்பிச்சீங்க,//
படிக்கிறது இல்ல பாஸ். பதிவு போஸ்ட் பண்ணுறது .. பாலா அண்ணா பதிவு இது தான்..
என்னைய மாதிரி பதிவருங்க ஆணிபுடுங்க எடத்துல இடுகை போடாம இருக்கறதுக்கு புறம்போக்கு அரை வேக்காட்டு அட்மினிஸ்ட்ரேட்டருங்க சதி பண்ணாலும், இடுகை போட வழியிருக்கு மக்கா. டாஷ்போர்ட்ல போய் செட்டிங்ல போய், இமெயில் அண்ட் மொபைல்ல கீழ ஈமெயில்னு இருக்கும். அத போஸ்ட் இம்மீடியட்லி அல்லது சேவ் ட்ராஃப்ட்க்கு செலக்ட் பண்ணிட்டு, சீக்ரட் வார்த்தைன்னு இருக்கிற பொட்டில ஒரு சங்கேத வார்த்தை போடுங்க. ஜிமெயில்ல இடுகை போட்டு அந்த ஈமெயிலுக்கு அனுப்பினா ப்ளாக்குக்கு போய்டும். ங்கொய்யால யார்ட்ட.
திருவொற்றியூர்-ல இருந்து ஏன் மீஞ்சூர் வரை போகணும்... எர்னாவூர் ப்ரிட்ஜ் வரைக்கும் போதுமே... மழை பேஞ்சா உயிருக்கு உத்திரவாதம் கிடையாது கண்டெய்னர் லாரிகளால்...
ReplyDeleteபொதுவா மீஞ்சூர் போகணும் என்றாலே எவ்வளவு நேரம் ஆனாலும் கும்மிடிபூண்டி டிரைன் புடிச்சுத் தான் போறது...
நல்ல எழுதி இருக்கீங்க...