Thursday, October 14, 2010

ஐயா சாமி



நாஸ்டா  எதும் இல்லை 
துண்ண. 
ஐயா சாமின்னு சொல்ல 
மட்டும் சொல்லி 
என்னத்த பண்ண.. 

ஐயா சாமி தர்மம் பண்ணுங்க 
எட்டி நின்னு பாத்த  
ஒரு எசமான் வாயில் இருந்து 
நாராசமாய் வந்து உளுது  
ச்சி ச்சி நாயே அந்தாண்ட போ 

குளிக்க ஆசை தான் 
ஆனால் அதுக்கும் கூட 
பைசா கேக்குறான் 
சுலப் இன்டர்நேஷனல் குப்புசாமி.

ராத்திரி தூங்கும் போது
நைசா கால உடுறாரு 
ரெண்டு கைளையும் 
வெரலு இல்லாத 
குஷ்டரோகி மன்னாரு

இன்னைக்கு பொழுது போகுமா 
தெரியலப்பா
பைசா இருக்கா 
இல்லபா 
நாதேறி போய் 
அந்த ட்ரெயின்ல
தலைய உடு
சரிப்பா
அப்பா 
நான் செத்துட்டா
உன்ன யாரு கண்ணம்மா பேட்ட
சுடுகாட்டுக்கு தூக்கின்னு போறது 
காப்பரேசன்காரன் வருவான்
யாரு அம்மாவை தூக்கின்னு போனானே அவனா ??? 




--
With Love
Romeo ;)

5 comments:

  1. மனம் கனக்கிறது!

    ReplyDelete
  2. அடடா நல்ல யதார்த்தமான கவிதை,இன்னும் எதிர்பாக்குறேன்

    ReplyDelete
  3. எல்லாம் நான் கொடுக்கிற தைரியம்.:)))

    கேபிள் சங்கர்

    ReplyDelete