Wednesday, October 27, 2010

உறுபசி - எஸ்.ராமகிருஷ்ணன்

சாவு வீட்டுக்கு சென்றால் அந்த வீட்டில் இருந்து வரும் அழுத்தமான அழும் குரலை கேட்கும் போது மனசை ஏதோ செய்யும். இறந்தவரை பற்றி சிலர் பேசிக்கொண்டு இருப்பார்கள், அவரின் கடந்த காலம், அவர் செய்த நல்லது கெட்டது எல்லாம் அங்கே அசை போட்டு கொண்டு இருப்பார்கள். இந்த சாவு நமது வீட்டில் நடந்து இருந்தால் எப்படி இருக்கும் என்று சில நிமிடங்கள் பயம் கலந்த நினைப்பு வருவதை நிறுத்த முடியாது. 2006 என்று நினைக்கிறன் தம்பி, நண்பன், உறவுக்காரர் ஒருவர் என்று அடுத்து அடுத்து சில மரணங்களை சந்தித்த போது அடுத்தது யாராக இருக்கும் என்று எனக்குள் நிறைய கேள்வி கேட்டுக்கொண்டேன். ஒரு கட்டத்தில் நண்பன் ஒருவனுக்கு போனில்  புலம்பினேன் மச்சான் அடுத்து யார்ன்னு தெரியலடா மாசம் ஒண்ணுன்னு  மூணு மாசமா தொடர்ந்து யாரவது செத்துட்டு இருக்காங்க அடுத்து யார்ன்னு தெரியலன்னு புலம்பினேன். ஒரு கட்டதில் அது நானாக இருந்தால் என்கிற நினைப்பு வந்து இருந்த கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் கெடுத்து தொலைத்தது. அடுத்த  மாதம் எந்த சாவும் விழாததால் கொஞ்சம் கொஞ்சமாக சாவு பயத்தில் இருந்து விலகினேன்.

ஒரு மனிதன் தன் வாழ்கையில் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று நினைத்து அதன்படி வாழ்ந்து உள்ளான் ? அல்லது உங்களிடமே இந்த கேள்வியை கேட்டு பாருங்கள் இந்த சமயம் நான் இப்படி வாழ நினைக்கிறேன் அதை செய்வதால் என்ன லாபம் அல்லது நஷ்டம்  என்று நினைத்து கூட பார்க்காமால் அதை உடனே செய்துவிடுவது என்று ஒரு நாளாவாது அதை செய்தது உண்டா!!!  ஆனால் இந்த நாவலில் வரும் சம்பத் இந்த சமயம் இதை செய்யபோகிறேன்  என்று தனக்கு தானே முடிவு செய்து  அதன்படி  நடப்பவன். தனக்கு தோன்றியதை  சரியா தவறா அதனால் மற்றவர்கள் பதிப்பு அடைவார்களா என்று ஒரு கணமும் யோசிக்காமல் செய்பவன். நாவலை முழுவதும் படித்து முடிப்பதற்கு முன்பே நாம் ஏன் சம்பத்தை போல இல்லை என்கிற எண்ணம் தோன்றுவதை நிறுத்தமுடியவில்லை. 


சம்பத் இறந்துவிட்டான் என்கிற செய்திவுடன் நாவல் தொடங்குகிறது.அழகர், சம்பத், ராமதுரை, மாரியப்பன் மற்றும் யாமினி எல்லோரும் ஒரே கல்லூரியில் வகுப்பில் தமிழை முதல் பாடமாக படித்தவர்கள். முதலில் அழகர் முலமாக சம்பத் பற்றிய நினைவுகள் விரிகிறது. பிறகு ராமதுரை, மாரியப்பன், சம்பத் மனைவி ஜெயந்தி, யாமினி என்று இவர்கள் முலமாக சம்பத்தின் கடந்த கால வாழ்கையை தெரிந்து கொள்ள முடிகிறது. 

நண்பர்கள் மூவருக்கும் சம்பத் மீது அன்பு இருந்தாலும் அவனை தூரத்தில் வைத்து தான் பார்க்கிறார்கள். அழகருக்கு சம்பத்தை பிடித்து இருந்தாலும் அவன் சம்பத்தை அவ்வளவு நெருக்கத்தில் வைத்து பார்த்து கொண்டது இல்லை. அது சம்பத் செய்த சில செயலுக்காக கூட இருக்கலாம். அழகரின் திருமணத்திற்கு கலந்துகொள்ள விருப்பம் இல்லை என்று அவன் திருமண தினத்தில் ஒரு தந்தி அனுப்புகிறான் சம்பத். ராமதுரை மட்டுமே அவ்வபோது சம்பத்தை அரவணைத்து செல்கிறான். யாழினி அவனுக்கு சில உதவிகளை செய்கிறாள். ஜெயந்தி அவனை தோளோடு அணைத்து கொண்டு அவன் செல்லும் இடங்களுக்கு எல்லாம் ஆட்டு குட்டியை போல செல்கிறாள்.  

தன்னை ஒருவரும் நெருங்க முடியாமல் இருக்க வேண்டும் என்று நினைத்துகொண்டு செய்கிறானா அல்லது அவன் ஒரு பைத்தியகாரனா என்று தோன்றும் அளவில் இருக்கிறது அவன் செயல்கள். அவனை ஹீரோ என்பதா அல்லது ஜீரோ என்பதா என்று நாவல் முடிந்த பிறகும் மனதுக்குள் சண்டை போட்டு கொண்டு இருக்கிறது.

சம்பத் தேர்ந்தெடுத்த அரசியல்வாதி போல இருக்கிறான், ஒரு நல்லா விற்பனையாளன் போல செயல்ப்படுகிறான், ஒரு தொழில் அதிபர் போல நர்சரி வைத்து பராமரிக்கிறான், சம்பத்துக்கு எது செய்தாலும் அதில் ஒரு தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து செயல்படுகிறான் ஆனால் எந்த ஒரு செயலையும் முழுவதுமாக செய்து முடிக்கமாட்டான். அரசியலாக  இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி அல்லது காதலியாக இருந்தாலும் சரி பாதிலையே கழற்றி விட்டுவிடுவான். சம்பத் அவன் வழியில் சென்று கொண்டு இருந்தான் என்று தான் சொல்லவேண்டும். ஜெயந்தியிடம் சம்பத் பலமுறை கேட்க்கும் ஒரே கேள்வி என்னை பைத்தியம்ன்னு நினைகிறாயா??? அதற்கு அவள் கண்ணீரோடு இல்லை என்கிறாள். 

காலம் தான் ஒரு மனிதனை எப்படி எல்லாம் மாற்றுகிறது, கல்லூரியில் படிக்கும் போது வகுப்புக்கு கருப்பு சட்டை அணிந்து வந்து ஆசிரியரை எதிர்த்து பேசிய நாத்திகவாதி சம்பத் பிறகு தனது செயல்களுக்காக கன்னியாஸ்திரி ஒருவரிடம்  காலை பிடித்து மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கெஞ்சுகிறான்!! சம்பத் எதை நோக்கி செல்கிறான் என்றே தெரியவில்லை, கால்போன போக்கில் வாழ்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறான். ஜெயந்தியை கூட ஒரு நாள் விட்டு செல்ல துணிந்துவிடுகிறான். 

  
ஆசிரியர் நாவலை கொண்டு சென்ற விதம் வெகு அருமை, ஒவ்வொரு கதாபாத்திரமும்  அவர்களின் வாயிலாக சம்பத்தை பற்றி விவரித்த விதம் சிம்ப்ளி சூப்பர். நாவலை படிக்க ஆரமித்த முதல் முடியும் வரை கீழே வைக்கவே முடியவில்லை அந்த அளவுக்கு சம்பத் அடுத்து என்ன செய்து இருப்பான் என்கிற கேள்வியை நோக்கியே நாவல் நகருகிறது. கொஞ்சமும் அயர்ச்சி தராத எஸ்.ரா அவர்களில் வார்த்தை ஜாலங்கள் பற்றி என்ன சொல்ல!!!

வரும் புத்தக கண்காட்சியில் நீங்கள் வாங்க நினைக்கும் புத்தகங்களின் வருசையில் கண்டிப்பாக இதையும் சேர்த்து கொள்ளுங்கள். 

படித்து பாருங்கள் புத்தகத்தை பற்றி நான் எழுதியதை விட பண்மடங்கு மேலான எண்ணத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவீர்கள்.

உறுபசி - எஸ்.ராமகிருஷ்ணன் 
விலை- 75
உயிர்மை வெளியிடு
சென்னை 

--
With Love
Romeo ;)




Thursday, October 21, 2010

பயன், பட்டாசு, புன்னகை

1.
எழுதுவது எல்லாம் எழுத்து அல்ல 
ஆனால் எழுதி கொண்டு இருப்பது தான் சுகம் 
எழுதுவது சுகம் தான் 
ஆனால் எழுதுவதால் என்ன பயன் 
உண்மைதான் 
எது 
என்ன பயன் என்பதில் 


2.
நீ மழையில் நனைவது நல்லது தான் என்றேன்  
ஏன் என்றாள்  
மழையும் கொஞ்சம் புண்ணியம் தேடிக்கொள்ளுமே 
இதற்கும் புன்னகைத்தாள்
 
3.
பட்டாசு தீர்ந்தது 
மத்தாப்பு மறைந்தது 
புஸ்வானம் பொரிந்தது 
ராக்கெட் பறந்தது 
அப்பறம் 
அவ்வளவு தான் பக்கத்துக்கு 
வீட்டுல வெடிச்சாங்க என்றான் மகன் 
அப்படியா என்றான் 
போனஸ் வாங்காதவன். 
 


--
With Love
Romeo ;)

Monday, October 18, 2010

சங்கதிகள் - 18/10/10



சந்தோஷமான ஒரு விஷயம் நடக்க போறதா இருந்தா எவ்வளவு  சந்தோஷாமா இருக்கும். அதே போல ஒன்று நடக்க இருக்கிறது. பத்து வருடங்கள் கழித்து ஸ்கூலில் படித்த நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர போகிறோம். நண்பர்கள் நிறைய பேர் போனில் தொடர்பு இருந்தாலும் எல்லோரும் சேர்ந்தா போல பார்த்து கொண்டது இல்லை. நவம்பர் மாதத்தில் ஒரு நாள்  எல்லோரும் சந்திக்கலாம் என்று ஒரு புள்ளியாய் ஆரமித்து உள்ளோம் அதற்கு வடிவம் குடுக்க இனிதான் ஆரமிக்க வேண்டும். 





போன வாரத்தில் ஒரு நான் ஆபீஸ்க்கு ட்ரெயின்ல வந்துட்டு இருந்தேன் வண்டி சைதாபேட்ல இருந்து கிளம்பும் போது ஒரு அம்மா ஆப்பிள் வித்துட்டு வந்துச்சு கூடையில் 30 பழங்கள் இருந்து இருக்கும். அவங்களும் ஆறு பழம் முப்பது ருபாய்ன்னு கூவிட்டே வந்துச்சு, அந்த பெட்டியில  யாருமே அவங்க கிட்ட பழம் வாங்கவே இல்ல. வெறுத்துபோய் எல்லோரையும் திட்ட ஆரமிச்சிடுச்சு, பத்து ருபாய்க்கு ஆறு பழம் குடுத்த வாங்கிபீங்களான்னு அடுத்து ஒரு கேள்வி கேட்டுச்சு யாரும் பதில் சொல்லலை. பாவம் அன்னைக்கு வியாபாரம் ஆகலைன்னு புலம்பிட்டே போச்சு. 


இதும்  ட்ரெயின் மேட்டர் தான், ஒரு நாள் சென்ட்ரல் ஸ்டேஷன்ல இறங்கி பார்க் ஸ்டேஷன்க்கு நடந்து வந்துட்டு இருந்தேன். அது நல்லா பீக்ஹவர், எனக்கு முன்னாடி புள்ளதாச்சி பொண்ணு நடந்து போயிட்டு இருந்து பக்கத்துல அந்த அம்மா புருஷன்  வந்துட்டு இருந்தான். அந்த பொண்ணு என்ன சொல்லுச்சுன்னு தெரியல அவ பின்மண்டையில் பொளேர்ன்னு ஒண்ணு வச்சான், அவன் அடிச்ச சவுண்ட் கேட்டு முன்னாடி போயிட்டு இருந்தவங்க பின்னாடி வந்துட்டு இருந்தவங்க எல்லாம் ஒரு செகண்ட் நின்னு பார்த்தாங்க, அந்த பொண்ணு பார்க்க பாவமா இருந்துச்சு. இப்படி எல்லோரு முன்னாடியும் பொண்டாட்டியை அடிக்கிறதுல அந்த ஆளு என்ன சுகத்தை கண்டான்னு தெரியல.  



மைனா படத்தில் நரேஷ் ஐயர் மற்றும் சாதனா சர்கம் பாடி இருக்கும் ""கைய புடி கண்ணா பாரு"" பாட்டு கேட்டு இருக்கீங்களா !!! அவ்வளவு ரசனையா இருக்கு. ஸ்லோவா ஆரமிக்கும் பாட்டு அப்படியே ஹைய் பிட்ச்ல போகும் இடம் இருக்கே சான்ஸ்சே இல்ல அவ்வளவு சூப்பர். வயோலின் இசைக்கிற இடம் அதை விட சூப்பர் .. மறக்காம கேட்டு பாருங்க இமான் கலக்கி இருக்காரு . 





கேபிள் சங்கரின் குளிச்சா.. குத்தாலம் -2  பதிவை படிச்ச போது பார்டர் கடைக்கு போகலைன்னு சொல்லி இருந்தாரு அப்படி என்ன இருக்கு அந்த கடையில்ன்னு கூகுள் ஆண்டவர் கிட்ட கேட்டாப்போ அவர் குடுத்த லிங்க்ல ஒன்னை  புடிச்சு போனேன். அது பதிவர் அந்தணன் அவரின் ப்ளாக் கொண்டு சேர்த்தது எதையோ படிக்க போய் அவர் ப்ளாக் முழுக்க படிச்சேன் .. செம சூப்பரா எழுதி இருக்காரு என்ன ஒரு காமெடி சென்ஸ் சினிமா மேட்டர் எல்லாம் அவ்வளவு சுவாரசியமா எழுதி இருக்காரு. நீங்களும் போய் படிச்சி பாருங்க நான் சொன்னது எவ்வளவு உண்மைன்னு தெரியும்.  






கல்யாணம் பண்ணிக்க போற ரங்கமணிகளுக்கு எல்லாம் ஒரு அட்வைஸ். எப்பயும் சாப்பிட்ட பிறகு தங்கமணிக்கிட்ட சண்டை போடுறது நல்லது, இல்லேன்னா சாப்பாடு கிடைக்காது. அதே மாதிரி பொய் பேசுறதுக்கு பதில் உண்மையை பேசிடுங்க, நமக்கு கிட்ட பொய் எல்லாம் ரொம்ப நேரம் தங்காது. அவங்களுக்கு உண்மை தெரிஞ்சா அப்பறம் அவஸ்தைப்படவேண்டம்.



ஜூனியருக்கு கொஞ்சம் கொஞ்சம் விவரம் தெரிய ஆரமிச்சிடுச்சு. டிவி ரிமோட் குடுத்தா அதை டிவிக்கு நேர எடுத்து காமிக்கிறார், போன் குடுத்தா காதில் வைக்கிறார், பவுடர் அடிக்கும் ஸ்பான்ச் குடுத்தா அதை முகத்தில் வைத்து அழுத்துகிறார். பார்க்க பார்க்க சந்தோசமா இருக்கு :)
    
  




--
With Love
Romeo ;)


Thursday, October 14, 2010

ஐயா சாமி



நாஸ்டா  எதும் இல்லை 
துண்ண. 
ஐயா சாமின்னு சொல்ல 
மட்டும் சொல்லி 
என்னத்த பண்ண.. 

ஐயா சாமி தர்மம் பண்ணுங்க 
எட்டி நின்னு பாத்த  
ஒரு எசமான் வாயில் இருந்து 
நாராசமாய் வந்து உளுது  
ச்சி ச்சி நாயே அந்தாண்ட போ 

குளிக்க ஆசை தான் 
ஆனால் அதுக்கும் கூட 
பைசா கேக்குறான் 
சுலப் இன்டர்நேஷனல் குப்புசாமி.

ராத்திரி தூங்கும் போது
நைசா கால உடுறாரு 
ரெண்டு கைளையும் 
வெரலு இல்லாத 
குஷ்டரோகி மன்னாரு

இன்னைக்கு பொழுது போகுமா 
தெரியலப்பா
பைசா இருக்கா 
இல்லபா 
நாதேறி போய் 
அந்த ட்ரெயின்ல
தலைய உடு
சரிப்பா
அப்பா 
நான் செத்துட்டா
உன்ன யாரு கண்ணம்மா பேட்ட
சுடுகாட்டுக்கு தூக்கின்னு போறது 
காப்பரேசன்காரன் வருவான்
யாரு அம்மாவை தூக்கின்னு போனானே அவனா ??? 




--
With Love
Romeo ;)

Wednesday, October 13, 2010

கோ , வெ, போ, ம, பா



கோ கோ 
கோவப்பட்டாள்

வெ வெ
வெட்கப்பட்டாள் 


போ போ  
போடா  என்றாள்

ம ம 
மாமா என்றாள் 

பா பா 
பறந்து சென்றாள் 

--
With Love
Romeo ;)

Sunday, October 10, 2010

சங்கதிகள் - 10/10/10

வேண்டுகோள்

                 இன்று இந்த நூற்றாண்டின் மிக பெரிய ஒற்றுமையான தேதி, 10/10/10 இந்த அறிய தினத்தில் நாம ஒரு உருப்படியான காரியத்தை செய்யலாமே. அதாவது 10 நிமிஷம் உங்க வீட்டில் இருக்கும் கரண்ட் சப்ளை ஆப் பண்ணிடுங்க. ஒரு வீட்டில் செய்தால் கொஞ்சம் போல கரன்ட் மிச்சம் பண்ணலாம் அதுவே ஒரு ஊராக இருந்தால் எவ்வளவோ மிச்சம் பண்ணலாம். ஸோ உங்களுக்கு தெரிஞ்சவங்க , பக்கத்துக்கு வீட்டுகாரங்க, சொந்தகாரங்க, நண்பர்கள் கிட்ட எல்லாம் கொஞ்ச நேரம் மெயின் பாக்ஸ் ஆப் பண்ண சொல்லுங்க. ஏதோ நம்மளால முடிஞ்ச சிறு உதவியா இருக்கட்டும். 


நன்றி

                இத்தனை நாளா தெரியாத ஒரு வழியை அண்ணன் பாலா சொல்லி இருக்காரு. ஆபீஸ்ல ப்ளாக் ஓபன் பண்ண முடியாம எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று எனக்கு தான் தெரியும். ஒவ்வொரு தடவையும் மெயில் பாக்ஸ்ல டைப் பண்ணி வச்சி வெளிய இருக்கும் இன்டர்நெட் கபேல போய் போஸ்ட் பண்ணிட்டு இருந்தேன்.  இன்னைக்கு அண்ணன் போஸ்ட் படிச்ச உடனே ஒரு டெஸ்ட் பண்ணி பார்த்தேன் சூப்பரா வொர்க் ஆகுது. அண்ணே இதை எனக்கு முதலே சொல்லி இருக்கலாம்ல இருந்தாலும் ரொம்ப நன்றி அண்ணே. 


என்னம்மா யோசிக்கிறாங்க டா சாமி .. 

             கொஞ்ச நாளுக்கு முன்னாடி நானும் தங்கமணியும் டிவி பார்த்துட்டு இருந்தோம் அப்போ ராஜ் டிவில சினிமா தெரியமான்னு ஒரு நிகழ்ச்சி மொக்கையான ஒரு கேள்வி கேட்டு பதில் சொல்லுங்கன்னு ஒருத்தர் பேசிட்டு இருந்தாரு. பதில் சொன்னா பணம்  பரிசுன்னு போட்டு இருந்துச்சு. சரி நானும் என்னோட போன்ல ட்ரை பண்ணிட்டு இருந்தேன் லைன் போகவே இல்ல. தங்கமணி போன் எடுத்து ட்ரை பண்ணேன் லைன் கிடைச்சுது பட் அது ஆட்டோமாடிக் வாய்ஸ், அதாவது என்னோட கால் வெயிட்டிங்  லிஸ்ட்ல இருக்குன்னு சொல்லுச்சு. சரின்னு நான் அஞ்சி நிமிஷமா காதுல வச்சு பார்த்துட்டு இருந்தேன் டிவில பேசிட்டு இருந்தவன் விடாம பேசிட்டே இருக்கான் ஆனா ஒருத்தரும் லைன்ல இல்ல. திடிர்ன்னு கால் கட் ஆகிடுச்சு என்னடான்னு பார்த்தா மொபைல் பலன்சே இல்ல. அஞ்சி நிமிஷத்துல ஐம்பது ருபாய் போச்சு!!!.. அட பாவிங்களா இவங்க கில்லாடி தனத்தை அப்போ தான்  தெரிஞ்சிகிட்டேன்,  ப்ரோக்ராம் பார்த்துட்டு இருந்தேன் பத்து நிமிஷமா அந்த பையன் பேசிட்டு இருந்தானே தவிர ஒருத்தரும் லைன்ல வரல. கீழ ஓடிட்டு இருந்த மெசேஜ் பார்த்தா ஒரு கால்க்கு பத்து ருபாய்ன்னு போட்டு இருக்கு !!! என்ன ஒரு திருட்டு தனம் பாருங்க நான் ஒருத்தன் அம்பது ரூவாயை அழுதேன் அதே மாதிரி எத்தனை பேரு எவ்வளவு ரூவா அழுதாங்களோ.  இப்போ இந்த நிகழ்ச்சி S.S.Musicல வேற தனியா வருது. இவங்க கேள்வி எல்லாம் பார்த்தா அவ்வளவு கொடுமையா இருக்கு. விஜய் & அனுஷ்கா ரெண்டு பேரு போட்டோ போட்டு இது எந்த படம்ன்னு கேக்குறாங்க!!! ஆனா ஒண்ணு மட்டும் உறுதி ஏமாத்துறவன் இருக்குற வரைக்கும் ஏமாறுகிறவன் ஏமாந்துட்டே தான் இருப்பான். அதில் நானும் ஒருவன் :(



திருவொற்றியூர் நியூஸ்

             எங்க ஏரியால நடக்கும் அரசியல் கூத்து எல்லாம் ரொம்ப கேவலமா இருக்கு. என்ன தான் அமைச்சர் தொகுதி என்று பெயர் இருந்தாலும் ரோடு இருக்குற நிலைமை எல்லாம் ஏதோ  குக்கிராமத்தில் இருப்பது போல இருக்கு. உங்களுக்கு நான் சொல்லுறது ஏதாவது சந்தேகம் இருந்தால் திருவொற்றியூரில் இருந்து மீஞ்சூர் வரைக்கும் போற டவுன் பஸ்ல போய் பாருங்க சென்னைல இவ்வளவு கேவலமான ஒரு ரோடுட்டை நீங்க பார்க்கவே முடியாது. இன்னும் ரெண்டு மாசத்துல ரோடு போடுறோம்ன்னு அமைச்சர் சொல்லி இருக்கார்ன்னு தினத்தந்தில படிச்சேன்.  ஒரு கொடுமை என்னன்னா திருவொற்றியூர் நகராச்சி ஷேர்மேன் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர் என்பதால் அவர் கட்சி சார்பா இந்த மாசம் ரோடு போடசொல்லி அரசுக்கு எதிர சாலை மறியல் போராட்டத்தை அறிவிச்சி இருக்காரு/இருக்காங்க. இப்போ எல்லாம் நான் அந்த ருட்ல போறதே இல்ல, பைக் எடுத்தா பீச் ரோடு சுத்திட்டு தான் போறேன்.  

எந்திரன்

                     நானும் எந்திரன் பார்த்துட்டேன், நானும் எந்திரன் பார்த்துட்டேன்... போன வாரம் ஆபீஸ்ல, பிரெண்ட்ஸ் சார்க் எல்லாம் இதுவே பேச்சா போச்சு. ஐயோ ஏதோ தெய்வ குத்தம் ஆனது போல இருந்துச்சு ஒரு சுபயோக சுபதினத்தில் நானும் தங்கமணியும் படத்தை பார்த்தோம். படம் பார்த்த பிறகு ரெண்டுபேருக்கும் ஒரே மாதிரியான மனநிலையில் தான் இருந்தோம். இத படத்துக்கா  இவ்வளவு பில்ட் அப் ??? ரஜினி அக்டிங் சூப்பர், ஐஸ்வரியா டான்ஸ் நல்லா இருந்துச்சு.  கடைசில கிராபிக்ஸ் கொஞ்சம் இல்ல ரொம்பவே கேவலமா இருந்துச்சு என்பது தான் உண்மை இது ஏதோ  ராமநாரையணனின் குட்டி பிசாசு படத்தின் அடுத்த வெர்ஷ போல இருந்துச்சு அவ்வளவு மோசம். முதல் பாதி சூப்பர், இரண்டாம் பாதி கொஞ்சம் ஓகே ரஜினி அக்டிங் சூப்பரோ சூப்பர். அதும் ஆடு மாதிரி கத்துற இடம் செம அப்லஸ்.     


ஐட்ரீம்

                  நான் +1 படிச்சிட்டு இருந்தப்போ மோகன்ராஜ்ன்னு ஒரு நண்பன் இருந்தான், காசிமேடுல இருந்து வருவான் அவன் காமெடி பண்ணுறதுல செம கில்லாடி, அதே மாதிரி படிப்பில் செம மக்கு. அவன் பத்தாவது பாஸ் பண்ணாதே பெரிய விஷயம்ன்னு அந்த ஸ்கூல் மாஸ்டர்ஸ் சொன்னங்க. அவன் வீடும் ஸ்கூல் பக்கத்திலே இருந்ததுனால மதியம் சாப்பாடு அவங்க அம்மா எடுத்துட்டு வந்து தருவாங்க. சில நாள் வஞ்சிர மீன் வறுவல் இருக்கும். நல்லா மூக்கு முட்ட சாப்பிட்டு மதியம் காணாம போயிடுவான் அவன் பேக் மட்டும் கிளாஸ் ரூம்ல இருக்கும் சாயந்திரம் ஸ்கூல் விடுற டைம்ல கரெக்டா ஸ்கூல் முன்னாடி வந்து நிப்பான் ஒரு பையன் அவன் பையை எடுத்துட்டு வந்து தருவான். எங்கடா போனன்னு கேட்டா ஹீ ஹீ ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு படத்துக்கு போனேன்னு சொல்லுவான், எந்த படம்னா அது எல்லா தியேட்டர்ளையும் ஓடி கடைசியா பெட்டிக்கு போகுறதுக்கு முன்னாடி கடைசியா ஒரு தடவை தியேட்டர்ல ரிலீஸ் பண்ண படமா இருக்கும். எந்த தியேட்டர்ன்னு கேட்டா பிரைட்டன்னு சொன்னான் அப்போ தான் தெரிஞ்சிது, அவனை பார்த்தா படம் பார்த்துட்டு வந்தவன் போல இல்ல முகம் எல்லாம் வீங்கி இருந்துச்சு , அப்பறம் தான் தெரிஞ்சிது அவன் படம் பார்க்க போகல அங்க போய் நல்லா தூங்கிட்டு வந்து இருக்கான். இந்த மாதிரி நிறைய தடவை ஸ்கூல் கட் அடிச்சிட்டு போய் தூங்கிட்டு வந்து இருக்கான். அந்த தியேட்டர் அவ்வளவு கேவலமா இருக்கும் அப்போ. இப்போ அந்த பிரைட்டன் தியேட்டர் தான் ஐட்ரீம் ஆகி ராயபுரம் ஏரியால சக்கை போடு போட்டுட்டு இருக்கு. சீட், சவுண்ட் சிஸ்டம், ஏ.சி, ஸ்க்ரீன், கிளீன் அண்ட் நீட், அதிகம் இல்லாத கட்டணம் முதல் வகுப்பு கட்டணமே 70 ருபாய் தான் தியேட்டர் நல்லா இருக்கு. அந்த தியேட்டர் போன உடனே எனக்கு மோகன்ராஜ் நினைப்புதான் வரும் .       



--
With Love
Romeo ;)

Thursday, October 7, 2010

DANGEROUS COMEDY

DANGEROUS COMEDY




--
With Love
Romeo ;)