Monday, November 7, 2011

சங்கதிகள் Nov 07 2011

வேலாயுதம் 

தமிழ் சினிமால இப்போ இருக்கிற ஹீரோஸ்ல காமெடி + ஆக்க்ஷன் ரஜினிக்கு பிறகு விஜய்தான் என்று சொல்ல வேண்டியது இல்லை. அதை அவர் சரியா உபயோகபடுத்தி கொள்ளவில்லை என்பது அடுத்து அடுத்து கொடுத்த அண்டர் ப்ளாப் படம் முலமா எல்லோரும் தெரிந்தவிஷயம். வேலாயுதம் படத்தை பற்றி பில்டப் நியூஸ் வந்துகொண்டு இருந்த போது ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்க்கு கட்டம் சரியில்லை என்றே நினைத்தேன், ஆனா இதை எல்லாம் பொய்யாகிடுச்சு படம். எவ்வளவு நாள் ஆச்சு விஜய்யை இப்படி ரசித்து பார்த்து. சின்ன குழந்தைகளுக்கு எந்த நடிகரை பிடிக்கும் என்று கேட்டால்  நிறைய குழந்தைகள் சொல்லும் பதில் விஜய்யாகத்தான் இருக்கும்.  

ஏழாம் அறிவுதான் முதலில் பார்க்கணும்ன்னு பிளான் பண்ணி இருந்தேன் ஆனா வந்த விமர்சனங்களில் வேலாயுதம் தான் நன்றாக இருக்கிறது என்று எல்லோரும் சொல்ல சரி அதையே பார்க்கலாம்ன்னு என்று பார்த்தேன். சும்மா சொல்ல கூடாது ரீமேக் புகழ் ராஜா படத்தை நல்லாவே எடுத்து இருக்காரு. முதல் பாதி படம் அட்டகாசம், காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து செமையாக செதுக்கி இருக்காங்க. சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்துடுச்சு, முக்கியமா ட்ரெயின்ல சரண்யா செய்த சாப்பாட்டை விஜய் அண்ட் கோ  சாப்பிட தயங்கும்  இடம் சூப்பர்.  இரண்டாம் பாதி எப்பொழுதும் போல விஜய் ரசிகர்களுக்கு ஏற்ற படம். விஜய் படங்களில் ஹீரோயிக்கு முக்கியத்துவம் என்பது தலைவாழை இலையில் வைக்கப்படும் உப்பை போல (ஊறுகாயை அடிகடி யூஸ் பண்ண கூடாது). தயிர் சாதத்திற்கு முக்கால் வாசி இலைகளில் மட்டுமே அது உபயோகப்படும்,  மாஸ் ஹீரோ படத்தில் இது சகஜம் என்பதால் ஹன்சிகா மற்றும் ஜெனிலியாவை கணக்கில்  வரவு வைக்கவில்லை.  மொத்தத்தில் விஜய்க்கு நல்லதொரு பிரேக் கிடைத்துள்ளது. :)

 
ஏழாம் அறிவு    

ஓவர் பில்ட் அப்  கொடுத்த குசேலன் படமே ரஜினியையே கவுத்தி போட்டுவிட்டது  என்பது இன்னும் தமிழ் சினிமா ஆட்களுக்கு தெரியவில்லை போல. முருகதாஸ், ரவிகேசந்திரன், சூர்யா, உதயநிதி, ஹாரிஸ் ஜெயராஜ், ஸ்ருதி இப்படி எல்லாமே ஸ்டார்களாக இருந்தும் இப்படி மொக்கையை போட்டுடாங்களேன்னு சொல்லாம இருக்க முடியல.

கஜினியில் செய்த ஒரே தவறை இதிலும் செய்துள்ளார் முருகதாஸ். கஜினியில் போலீஸ் ஆபிசர்ராக வரும் ரியாஸ்கான் கதாபாத்திரம் எப்படி டம்மியானதோ அதே போல இதில் கொத்து கொத்தாக போலீஸ் ஆட்களை போட்டு தள்ளியும் அதை பற்றி யாரும் அக்கறை கொள்ளாமல் இருப்பது.  ஜஸ்ட் லைக் தட் என்று ஹிப்னாடிசம் முலமாக கொலை செய்யமுடியும் என்பதை முழுவதுமாக நம்பமுடியவில்லை. முருகதாஸ் எடுத்து கொண்ட  தீம் வித்தியாசமாக இருக்கிறது அதை கொடுத்த விதம் தான் சரியில்லை. படத்தின் ஹீரோ சூர்யா என்பதை விட வில்லனாக வந்து அசதி இருக்கும் ஜானியை சொல்லலாம். வசனம் எத்தனை லைன் என்று கேட்டால் விரல் விட்டு எண்ணி சொல்லிவிடுவார், உடல் மொழி முலம் நன்றாக நடித்துள்ளார்.இந்தியாவில் சென்னை தான் கிராபிக்ஸ் வேலை நன்றாக செய்கிறார்கள் என்று மற்றமாநில சினிமா கலைஞர்கள் சொல்லும் வேளையில் ராமநாராயணன் படத்தில் வருவதை போல கிராபிக்ஸ் பண்ணி இருப்பது நன்றாக இல்லை. ஹாரிஸ் ஜெயராஜின்  பின்னணி இசை ஏனோ தானோ என்று இருக்கிறது மனதில் எதுவும் ஒட்டவே இல்லை.திரைகதையை சுலபமாக யூகிக்க முடிகிறது என்பது பெரிய மைனஸ் பாயிண்ட். 

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் டைரக்டர் சார். :)



மழை வாங்கலையோ மழை 

சென்னையில் இப்படி விடாமல் மழை பெய்து கொண்டு இருப்பதை நான் இது வரை பார்த்ததே இல்லை.சிட்டி குள்ளே எல்லாம் தண்ணி சிற்றாறு போல ஓடி கொண்டு இருப்பதை பார்த்தால் கவலையாக இருக்கிறது. இதில் சோகமான செய்தி பாதாள சாக்கடையில் விழுந்து ஒரு பெண் ஆசிரியை பலியானது. எங்கள் பகுதிக்கு மேயர் வருகிறார் என்று ரோடில் இருந்த மண்ணை ஒதுக்கி தள்ளி கொண்டு இருந்தார்கள் துப்புரவு பணியாளர்கள். கடைசி வரை அவர் வரவேயில்லை. மா.சுப்பிரமணியன் இருந்திருந்தால் ஆள் களத்தில் குதித்து வேலையை முடுக்கிவிட்டு இருந்து இருப்பார். தற்போதைய மேயர் இன்னும் தனது வேலையை சரிவர துடங்கவே இல்லை என்பது நன்றாக தெரிகிறது.  சென்னை மேயருக்கு இன்னும் கொஞ்ச நாட்களுக்கு நிறைய சவால் காத்து கொண்டு இருக்கிறது.

 

மேயரின் குழந்தை தனம்

ஈரோடு துணை மேயராக கே.பி.பழனிச்சாமி பதவி ஏற்ற நிகழ்ச்சியில் அவரது ஆதரவாளர்கள் வைத்த வாழ்த்து பேனரில் மேயரின் பெயர் மற்றும் புகைப்படம் இல்லாததை கண்டு தனது இமேஜ் பாதிக்கப்படுவதை எல்லோர் முன்னிலையிலும் வெளிப்படுத்தி விட்டார். இது போதாது என்று அன்று செய்தியாளர்களிடம் துணை மேயர் தனக்கு இப்பொழுதே  மரியாதை தருவது இல்லை இனி எப்படி தான் மக்களுக்கு சேவை செய்யமுடியும் என்று ஆவேசத்தோடு சொன்னதும் இல்லாமல் இதை முதல்வர் அம்மாவின் பார்வைக்கு கொண்டு செல்வேன் என்று பெருங்கோவதுடன் பேசினார். இது எப்படி இருக்குதுன்னா ஸ்கூல் பிள்ளைகள் அடிச்சிகிட்டு இரு இரு உன்னைய டீச்சர் கிட்ட சொல்லி அடிவாங்க வைக்கிறேன் சொல்லுறது போல. துணை மேயர் பதவி ஏற்ற அன்றே இப்படி முட்டிகிட்டு இருக்காங்களே இவங்க எப்படி மக்களுக்கு சேவை செய்ய போறாங்களோ.


டிவி கார்னர்

ஒரு விஷயத்தை ஆராய்ந்து முடிவெடுப்பது என்பது அவர் அவர் கையில் தான் இருக்கிறது அதை விட்டுவிட்டு உங்களுக்குள்ள சண்டையா வாங்க நாங்க  பஞ்சாயத்து பண்ணி வைக்கிறோம்ன்னு கூப்பிட்டு தீக்குச்சி போல இருக்கும் அவங்க பிரச்சனைல பெட்ரோல் ஊத்தி விட்டுட்டு போறது என்பது கொடுமையா இருக்கு.


ZEE தமிழ் தொலைகாட்சியில் சொல்லவதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்தும் நிர்மலா பெரியசாமி அதை தான் செய்யுறாங்க. ரெண்டு நாள் அந்த நிகழ்ச்சியை பார்த்தேன் கதை அல்ல நிஜம் நிகழ்ச்சியை போல தான் இருக்கு அதே சமயம் லக்ஷ்மி அளவுக்கு வரவில்லை. எதுவாக இருந்தால் என்ன கடைசியில் தனது டிரேட் மார்க் வசனமான வணக்கம்ம்ம் மட்டும் பேஸ் வாய்சில் கேட்க நன்றாக இருக்கிறது.

பாலிமர் சேனலில் வனிதா விஜயகுமார் இதே போல மற்றவர்கள் பிரச்சனையை அலசும் நிகழ்ச்சியை நடத்துகிறார்.அம்மிணி வீடு பிரச்சனையே இன்னும் ஓயல இதுல அவங்க பக்கத்து வீட்டு பிரச்சனைக்கு தீர்வு சொல்லுறாங்க.. நடத்துங்க ஐயா நடத்துங்க.  


எல்லா தொலைக்காட்சியும் ஒளிபரப்பாகும் தங்களது அனைத்து நிகழ்ச்சியிலும் அந்த தொலைகாட்சியின் பெயரை லேபில் போல  நடுவில் போட்டு விடுவார்கள்.  ZEE தமிழ் தொலைக்காட்சியும் அதே போல தான் செய்கிறது ஆனால்  ஒரே வித்தியாசம்    ZEE TAMIZH என்று போட்டு கொண்டு இருப்பது. தமிழ் என்பதை ஆங்கிலத்தில் TAMIL தானே எழுத வேண்டும் இது என்ன புதுசா இவங்களே ஒரு வார்த்தையை கண்டுபுடிச்சி இருக்காங்க??

சாப்பாடு பற்றி நிறைய நிகழ்ச்சிகள் வந்தாலும் ஹிஸ்ட்ரி சேனலில் வரும் FOOD TECH நிகழ்ச்சி ரொம்பவே வித்தியாசம். 

 
உதாரணத்துக்கு  உப்புமா சாப்பிட இருக்கிறார் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் என்றால் அதற்கு என்ன என்ன தேவை அது எங்கு கிடைக்கும் அதை எப்படி தயார் செய்கிறார்கள் என்று ரொம்ப சுவாரசியமாக காண்பிக்கபடுகிறது.


ஜூனியர் கார்னர்

எனக்கெல்லாம் இப்படி ஒரு நாள் கிடைக்கவில்லை என்று ஏங்கி கொண்டு இருக்கிறேன் ஆனால் ஜூனியருக்கு இந்த அருமையான நாள் பற்றி தெரியாமலே இருக்கிறான் ஆம் வரும் 11/11/11 அன்று அவனுக்கு இரண்டாவது பிறந்தநாள்.



 --
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)



 


4 comments:

  1. அண்ணா ஜூனியர் சார்பாக விழா நடத்திடுங்க. நான் வந்து சிறப்பிக்கிறேன்.

    THAMIZH என்பது தான் சரியான உச்சரிப்பு வரும் என்பார்காள். TAMIL என்றால் 'டமில்' ஆகி விடும். ஆனா இவர்கள் இரண்டிற்கும் பொதுவாக 'டமிழ்' என உச்சரிப்பு வருவது போல TAMIZH என வைத்துள்ளதாக சொல்கிறீர்கள். :-)

    ReplyDelete
  2. // தமிழ் சினிமால இப்போ இருக்கிற ஹீரோஸ்ல காமெடி + ஆக்க்ஷன் ரஜினிக்கு பிறகு விஜய்தான் என்று சொல்ல வேண்டியது இல்லை //

    ஆமாம் ரெண்டு பேர் படத்தை பார்த்தாலும் சிரிப்பு பொத்துக்குட்டு வரும்...

    ReplyDelete
  3. ஜூனியருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. மேயர் குறித்து இப்பொழுதே புலம்புகிரீர்களா? நம்ம எதிர்க்கட்சி தலைவர் ஆறு மாசம் டயம் கேட்டாரே மறந்துட்டீங்களா? யார் வந்தாலும் மாறாதுங்க

    ReplyDelete