இரவு அடித்து போட்டது போல தூங்கினேன், ஜூனியர் எனக்கு முன்பே தூங்கிவிட்டான். அதிகாலை 4 மணி அளவில் மகா எழுப்பிவிட்டாள், பல்லு மட்டும் தேச்சிட்டு வாங்க ஆத்துல(?) போயி குளிச்சிகளாம் என்று சொல்லிவிட்டு நடையை கட்டினாள். எனக்கு அந்த அதிகாலையில் ஒரு சந்தேகம் வந்தது, நேத்து தான் அங்க போனோம் ஆறு என்கிற பெயருக்கு ஏற்றது போல எதுவுமே அங்க இல்லையே எதில் போயி குளிப்பது ??? ஒருவேளை அந்த அழுக்கு தண்ணிலயா!!! நினைச்சாலே உடம்பு கிர் என்று ஷாக் அடித்தது. வேறு வழியில்லை தோளில் கரும்பு கட்டை தூக்கி கொண்டு நடந்தேன். எனக்கு எதிரே நிறைய மக்கள் கையில் தீ சட்டியை ஏந்திக்கொண்டு வந்தார்கள். சிலர் கரும்பு தொட்டில், சிலர் அழகு குத்தி கொண்டு இப்படி நேர்த்தி கடனை செலுத்துவதற்காக அதிகாலைலே ஆவலாய் பறந்தார்கள்.
ஆத்துக்கு அருகில் சென்ற போது தான் தெரிந்தது எப்படி குளிப்பது என்று. ஒரு நீளமான பைப்பில் குடை போல சில குழாய்களை வெளியே இழுத்து அதில் ஷவர் போல செய்துள்ளார்கள். தண்ணீர் நிற்காமல் கொட்டி கொண்டு இருந்தது. இதை போல இரண்டு சாதனங்கள் இருந்தது. அதில் சென்று குளித்துவிட்டு கரும்பு தொட்டில் தூக்கி கொண்டு சென்றோம். ஜூனியர் கையில் ஒரு சாக்லேட் குடுத்து தொட்டில் சீலையில் இரண்டு பக்கமும் கால்களை வெளியே விட்டு கொண்டு ஜாலியாக வேடிக்கை பார்த்து கொண்டு வந்தான். இவன் கண்டிப்பா கத்தி மானத்தை வாங்குவான் என்று தான் நினைத்தேன். நல்லவேளை தலைவர் ரொம்ப அமைதியாக வந்து வேண்டுதலை நிறைவேற்ற உதவினார். கரும்பு தொட்டில் கோவிலை வந்தடைந்த போது ஒரு அன்பர் வந்து ஒரு கை குடுத்தார். ஜூனியரை எடுக்க சொல்லிட்டு ஐம்பத்தி ஒருருபாய் தச்சனை என்று வாங்கி கொண்டார். கரும்பை அங்கேயே போட சொல்லி விட்டு நீங்க நடையை காட்டுங்கள் என்றார். கீழே இருந்த கரும்பை ஒருவர் அள்ளிட்டு சென்று ஒரு இடத்தில வைத்தார். நூற்றுக்கும் மேற்ப்பட்ட கரும்புகள் குவித்து வைத்து இருதார்கள். நல்ல சைடு பிசினஸ் ..
ஒரு பக்தர் ஆத்தில் இருந்தே அங்கபிரத்சணம் செய்து கொண்டு வந்தார் ரோடு மொத்தமும் அவ்வளவு சேரும் சகதியுமா இருந்து மனுஷன் கண்டிப்பா அடுத்த முறை இந்த மாதிரி வேண்டிக்கொள்ள மாட்டார் கோவில் போய் சேர்வதற்குள் அவ்வளவு வேதனையை கண்டிப்பா சம்பாதித்து இருப்பார்.
நிறைய பேர் சாமி ஆடிக்கொண்டு இருந்தார்கள். மாரியம்மன் ஒரு சாமி தானே இங்க இருக்கு எப்படி இத்தனை பேர் மேல ஒரே சாமி ஏறும்?? மகா கிட்ட கேட்டேன் அவளுக்கும் பதில் தெரியவில்லை ..
ஒரு பக்தர் வலது காலை சற்றே விந்தி விந்தி நடந்தார் அவரும் தொட்டில் சீலை எடுத்து தனது வேண்டுதலை நிறைவேற்றினார். அவர் சென்ற போது ரோடு ஓரத்தில் இருந்த எல்லோரும் அவரையே பார்த்து கொண்டு இருதார்கள்.
ஒரு பக்தர் வலது காலை சற்றே விந்தி விந்தி நடந்தார் அவரும் தொட்டில் சீலை எடுத்து தனது வேண்டுதலை நிறைவேற்றினார். அவர் சென்ற போது ரோடு ஓரத்தில் இருந்த எல்லோரும் அவரையே பார்த்து கொண்டு இருதார்கள்.
பலர் அழகு குத்தி கொண்டும் கையில் தீசட்டி எந்திகொண்டும் வந்தார்கள். வயது வித்தியாசம் எல்லாம் இல்லை. ரோட்டு ஓரத்தில் சிலர் கையில் எண்ணெய் வைத்து கொண்டு தீசட்டி கொண்டு வருபவர்களின் சட்டியில் எண்ணையை உற்றி கொண்டு இருந்தார்கள். இது ஒருவகை நேர்த்தி கடன்!!!.. இதனால் சில சட்டியில் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்தது.
அழகு குத்தி கொண்டு வந்தவர்களில் நிறைய பேரின் வேல் பத்து அடிக்கு குறையாமல் இருந்தது. பார்க்கும் போதே யாரோ எனக்கு அழகு குத்துவது போல இருந்தது. சிலர் சாமி வந்தது போல ஆடிக்கொண்டே இருந்தார்கள்.
(இது கண்டிப்பாக பதினைந்து அடிக்கு மேல் இருக்கும்)
இதற்கு எல்லாம் தான் தான் அப்பன் என்று முவர் கூட்டணி வந்தது. ஊரே அவர்களைத்தான் பார்த்து கொண்டு இருந்தது. அதை எப்படி விலகுவது என்று தெரியவில்லை புகைப்படத்தை பாருங்கள்
(டெர்ரர் கூட்டணி)
எல்லா வீதிகளிலும் அன்னதானம் நடைபெற்று கொண்டு இருந்தது, எங்கிருந்தோ ஒரு சின்ன யானை வண்டி வந்து நிற்கும் உள்ளே இருந்து ஏதாவது வெரைட்டி சாதத்தை போட்டு கொண்டே இருப்பார்கள். மக்களும் வாங்கி கொண்டேடேடே இருப்பார்கள். சிலர் மண்டபங்களில் அன்னதானம் செய்து கொண்டு இருந்தார்கள். எனது மாமானார் வீட்டு தெரு முக்கில் குவிந்து இருந்த குப்பைகளை அள்ள அடுத்த நாள் இரண்டு லாரி வந்தது.
(என்ன ஒரு மேக் அப்)
லோக்கல் டிவியில் முன்று நாட்களும் இந்த திருவிழாவை தான் ரீலை செய்து கொண்டு இருந்தார்கள். மிக பெரிய காமெடி என்னவென்றால் ஒரே நேரலையை நான்கு லோக்கல் சேனல்கள் பகிர்ந்து கொண்டு ஒரே நேரத்தில் ஒளிப்பரப்பு செய்தது தான். ஒரு லோக்கல் சேனலில் திருவிழாவிற்கு வந்தவர்களிடம் லைவ்வாக பேட்டி கண்டு அவர்களுக்கு பிடித்த பாடலை ஒளிபரப்பு செய்தார்கள். இங்கேயுமா ????
(நேரடிஒளிபரப்பில்)
கேமராவில் கிளிக்கியது ;)
--
With Love
அருண் மொழித்தேவன் @ Romeo ;)
பல வருடங்களுக்கு முன் கரூரில் நடக்கும் இந்த விழாவை பார்த்து ரசித்த நினைவுகள் வருகிறது. நன்றி பகிர்தலுக்கு
ReplyDelete