Wednesday, June 22, 2011

நாளையோ அல்லது மறுநாளோ

 
எரிந்து கொண்டு இருக்கும் நெருப்பில் நிழலை தேடுகிறேன்
உறங்கும் முன் ஏற்படும் அசதியை விரட்ட விழித்து கொண்டு இருக்கிறேன் 
வாசனை இல்லாத ஒரு பனி பிரதேசத்தில் வாசம் செய்கிறேன் 
புகைந்து கொண்டு இருக்கும் சுருளில் வாழ்கையை முன்னோக்கி பயணிக்கிறேன்
நாளை எனது நாளாக வேண்டும் என்று  கனவில் மிதக்கிறேன்
நான் யார் என்று எனக்குள் நானே கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கிறேன்
நீங்களே யூகித்து கொள்ளுங்கள் நாளை நான் இல்லாமலும் இருப்பேன் 
உங்கள் அருகில் இருந்தாலும் இருப்பேன் 
நாளை எனது நாள் என்கிற நம்பிக்கையில் கழியும் வேலையற்றவன்



அவன் ஒரு பைத்தியக்காரன் என்றே அறியபட்டவன் 
அவன் ஒரு முட்டாள் என்றே அழைக்கபட்டவன் 
அவன் ஒரு மாதிரி என்றே கிசுகிசுக்கபட்டவன்   
அவனை போல நான் இல்லையே என்று ஏங்கவைத்தவன் 
ஒரு நாள் அவன் காணாமல் போனான் 
மறுநாள் அவனை  மறந்து போனேன் 








 

--
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)









2 comments:

  1. >நாளை எனது நாள் என்கிற நம்பிக்கையில் கழியும் வேலையற்றவன்

    அழகு வரிகள்

    ReplyDelete
  2. தாங்கள் கூறுவது தன்னம்பிக்கை இழந்த
    மனிதனையா?...கவிதைநடை அழகு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete