Monday, June 20, 2011

அவனும் இவனும் -- ஆரண்ய காண்டம்மும்

அவன் இவன் 

பாலாவின் முந்தைய படங்களை காட்டிலும் இந்த படம் ஒரு வகையில் கொஞ்சம் வித்தியாசமே. முக்கியமாக படத்தில் கதை என்பது ஏதும் இல்லை அதுவே ரொம்ப வித்தியாசம். மத்தபடி பாலாவின் அசரடிக்கும் காமெடிக்கு பஞ்சம் இல்லை, ஆனால் ரொம்பவே நெளியவைத்த வசனங்கள் சிலதை கேட்ட போது இது பாலா படமா என்று நினைக்க தோன்றியது. வசனம் எஸ்.ராவா ???

விஷாலில் நடிப்பு சூப்பர் அறிமுகமாகும் முதல் காட்சிலேயே செம க்ளாப்ஸ் அள்ளுறார். அந்த முதல் குத்தாட்டத்தில் தியேட்டர்ரே குலுங்குது கொஞ்ச நேரத்தில் ஆரியா அவர் அம்மாவுடம் போடும் குத்தாட்டம் அடுத்த சரவெடி... 



சிரிப்புக்கு பஞ்சமே இல்லாமல் முதல் பாதி செல்லும் அதே வேளையில் இது தேவையா என்று சில வசனங்கள் கேட்கும் போது ஏற்படுகிறது. முக்கியமாக பேண்டுக்கு ஜிப்பு தேவையா என்கிற வசனம் எல்லாம் ரொம்ப ஓவர். ஜமினாக வரும் குமார் நடிப்பு நன்றாக இருக்கிறது. அம்பிகா, ஆர்யாவின் அம்மா, அப்பனாக வரும் ஸ்ரீகாந்த், ஆரியாவுடன் சுத்திகொண்டு இருக்கும் அந்த குண்டு பையன் என்று அவர் அவர் கதாபாத்திரங்கள் தெரிந்து நடித்து இருகிறார்கள். 


நான் கடவுள் படத்தில் நடித்திருந்த அந்த போலீஸ்காரர் கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா!! இதில் அதை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் இருந்து இருக்கவேண்டும் அல்லவா   பச் படம் முடிந்து வெளிய வந்த பிறகு அவர் முகமே மறந்துவிட்டது. ஆர்.கே வில்லன் கெட்டப்புக்கு நல்ல சாய்ஸ் தான் இருந்தாலும் இப்படி கடைசியில வந்து கொஞ்ச நேரத்தில் மண்டையை போடுறதை பார்க்கும் போது இதன்னுண்டு சீனுகா ஆர்.கே அப்படி பேட்டி குடுத்தாரு? போலீஸ் ஸ்டேஷன்ல கிடாவெட்டுறதை எல்லாம் இப்படியா ஆட்டோல மைக் செட் போட்டு பேசுவாங்க. கொஞ்சம் கம்மியா ரீல் விட்டு இருக்கலாம். 


விஷாலின் அந்த மாறுகண் முயற்சி ரொம்பவே பாராட்ட படவேண்டிய ஒன்று. படத்தில் நிறைய ரிஸ்க் எடுத்து இருக்காரு. விஷாலை விட ஆரியாவின் கதாபாத்திரம் தான் செம ரவுசு, நந்தாவில் சூர்யாவை அவ்வளவு சீரியஸாக காண்பித்துவிட்டு பிதாமகனில் ஜாலியாக  காமித்தது மாதிரி ஆரியாவுக்கு நான் கடவுள் படத்துக்கு பிறகு.  முக்கியமா தண்ணி அடிச்சிட்டு பேசும் அந்த சீன் சூப்பர் சூப்பர் ... 


மொத்தத்தில் ஒரு முறை கண்டிப்பா பார்க்கலாம்...






ஆரண்ய காண்டம்




பக்காவான ஒரு கேங்ஸ்டர் படம்.  டைரக்டருக்கு இது முதல் படமாம் நம்பவே முடியல.. ஒவ்வொரு சீனும் செம கிளாஸ் படம் முழுக்க அவ்வளவு ராவா எல்லாத்தையும் பதிவு செய்து இருக்காங்க. ஜக்கி ஷாரப், சம்பத், ரவி கிருஷ்ணா, வாழ்த்து கெட்ட ஜமின், அவன் மகன் கொடுக்கா புளி அப்பறம் அந்த ஹீரோயின் எல்லோரும் கிடச்ச கேப்பில் எல்லாம் சிக்ஸர் அடிக்கிறாங்க. 







படத்தின் முக்கியமான நபர் யுவன், பின்னணி இசையில் 7G படத்திற்கு பிறகு ரொம்ப ரசித்து கேட்டேன். டயலக் செம ஷார்ப்  எங்கேயும் கட் வாங்காமல் ரஜினி கமலை எல்லாம் இழுத்துவிட்டு அட போடவைத்து இருகிறார்கள். அதும் அந்த சின்ன பையனும் அவன் அப்பாவும் பேசும் இடம் எல்லாம் சான்ஸ் இல்ல. ஒளிப்பதிவு இயக்குனர் வினோத் உழைப்பு பளிச்சென்று எல்லாம் இடங்களிலும் மின்னுது. 

வர வர கேங்ஸ்டர் படம் என்றாலே வட சென்னை ஏரியாவை தான் காட்டுறாங்க. பெரிய பில்டிங் மாடில கண்டைனர் யார்ட் தெரியுற மாதிரி  ஷாட் வைக்கிறது  தலையாய பிரச்சனையா இருக்கு.  படம் ஆரமித்த முதல் முப்பது நிமிடங்களிலே கிளைமாக்ஸ் கொஞ்சம் யூகிக்க முடிகிறது. என்ன சொல்லிட்டு போனாலும் தமிழ் சினிமாவில் இப்படி கூட படம் எடுக்கலாம் என்று அரிதாக சில படங்கள் வருகிறது அதில் இதுவும் ஒன்று.  







--
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)













5 comments:

  1. ரைட்டு, ரெண்டுமே இன்னும் பாக்கல. :(

    ReplyDelete
  2. சூப்பர் நண்பா,வெரிகுட்

    ReplyDelete
  3. உங்கள் பதிவு நன்றாக இருந்தது . உங்கள் செய்திகளை கீழே பதியவும்.

    Share Here

    ReplyDelete
  4. விமர்சனம் அருமை, உங்கள் ப்ளாக் டெம்ப்ளேட் சூப்பர்ப், சான்சே இல்ல..... வாழ்த்துக்கள்!

    ReplyDelete